நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

மனிதனின் அன்றாட செயல்பாடுகளினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51 பில்லியன் டன் பசுமை இல்லா வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வேகத்தில் சென்றால், 2050வாக்கில் உலக வெப்பநிலை தற்போதைய சராசரி வெப்பநிலைக்கு 2 டிகிரிக்கு மேல் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

இதன் விளைவு நிச்சயம் பேரழிவை தரும் என்பது மட்டும் உறுதி. உலக வெப்பநிலையின் விரைவான உயர்வினாலேயே ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ, அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது, கடலோர பகுதிகளில் சூறாவளிகள், அடிக்கடி & திடீரென வானிலை மாற்றங்கள் மற்றும் மஹாராஷ்டிராவில் வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

பூஜ்ஜிய மாசு உமிழ்வை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். 2050ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய மாசு உமிழ்வை உறுதி செய்ய வேண்டுமென்றால், காற்று மாசு உமிழ்வை குறைத்தல் மற்றும் வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சுதல் போன்ற அணுகுமுறைகளை கையாள வேண்டும்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

காலநிலை பேரழிவுகளை தவிர்க்க வேண்டுமானால் மனித இனம் நிகர-பூஜ்ஜிய மாசு உமிழ்வை அடைய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன இயக்க தளமான இ பைக் கோ (www.ebikego.in), வளர்ந்துவரும் ஸ்டார்ட்அப் லோசூட் (lowsoot.com) உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

பூஜ்ஜிய மாசு உமிழ்வை அடைவதற்கான காலத்தை விரைவாக கொண்டுவரும் நோக்கிலும், இந்தியாவில் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் இந்த கூட்டணி உருவாகியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு கொடுப்பதில் இந்தியாவின் முன்னணி பிளாட்ஃபாரமாக இ பைக் கோ விளங்குகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

ஆனால் நம் சென்னையில் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் தற்போதைக்கு வாடகைக்கு கிடைப்பதில்லை. நாடு முழுவதும் வணிகத்தை அதிகரிக்க இ பைக் கோ திட்டமிட்டால், அடுத்ததாக சென்னையில் தான் புதியதாக இந்த நிறுவனம் தனது வணிகத்தை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

ஏனெனில் நாட்டின் மற்ற நகரங்களை போல் நமது தலைநகர் சென்னையிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடகைக்கு எடுக்கப்படும் இ பைக் கோ-வின் எலக்ட்ரிக் 2-வீல்ர்ஸை, மொபைலை சார்ஜ் செய்வது போல் மிக எளிமையாக சார்ஜ் செய்யலாம்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

மாதத்திற்கோ அல்லது முழு வருடத்திற்கோ கூட இந்த மொபைல் போன் செயலியின் மூலமாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பெறலாம். இதற்கான மாதந்திர மற்றும் வருடாந்திர கட்டணங்கள் அனைத்தும் மிடில்-கிளாஸினர் ஏற்ற அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

பஞ்சாப் மாநில, அமிர்தசரஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இ பைக் கோ நிறுவனத்தை இர்பான் கான் என்பவர் நிறுவினார். வணிகத்திற்கு தேவையான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் கொண்டுள்ள இந்த நிறுவனம் டெலிவிரி பணிகளுக்காக சொமோட்டோ, டெல்ஹிவரி, ஃபெர்ன்ஸ் & பெடல்ஸ், கோஸ்டாப்ஸ் நிறுவனங்கள் உடன் கூட்டணியில் உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உலக வெப்பநிலை!! காற்று மாசை குறைக்க LowSoot உடன் இணைந்தது eBikeGo

இ பைக் கோ நிறுவனம் மாசு உமிழ்வை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, வேலையில்லா திண்டாட்டத்தையும் தவிர்ப்பதாக அதன் நிறுவனர் தெரிவித்து வருகிறார். மேலும் அடுத்த 5 வருடங்களில் சுமார் 21 மில்லியன் டன்கள் கார்பன் மாசு உமிழ்வை குறைப்பது என பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

Most Read Articles

English summary
eBikeGo to incubate LowSoot to reduce carbon emission in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X