ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்! 500மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்.. முன்னணி நிறுவனம் அதிரடி!

பிரபல நிறுவனம் ஒன்று ஒரு லட்சம் மின் வாகன சார்ஜிங் மையத்தை கட்டமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நாட்டின் ஏழு முக்கிய நகரங்களை அது தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. எந்தெந்த நகரங்களில் சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் டூ-வீலர் மொபிலிட்டி நிறுவனமான இ-பைக்கோ (eBikeGo) ஒரு லட்சம் மின் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஓடி தொழில்நுட்பம் அடங்கிய மின் வாகன சார்ஜிங் மையங்களையே நிறுவனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

நாட்டில் மின் வாகனங்கள் சற்றே பிரபலமடைய தொடங்கியிருக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மின் வாகன விற்பனைச் சூடிபிடித்துக் காணப்படுகின்றது. கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகளவில் மின் வாகன விற்பனை நடைப்பெற்று வருகின்றது. இதன் விளைவாக சாலையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தையாவது நாம் பார்த்துவிடும் நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

அதேவேலையில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் விற்பனையைக் காட்டிலும் மின் வாகனங்களின் விற்பனை மிக குறைவாகவே காட்சியளிக்கின்றது. இதற்கு மின் வாகனங்கள் அதிக விலையில் விற்பதும் ஓர் காரணமாகும். ஆனால், இதனைக் களைக்கும் பொருட்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்கத் தொடங்கியிருக்கின்றது. ஒன்றிய அரசு ஃபேம்2 திட்டத்தின்கீழ் மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

ஆகையால், மின் வாகனங்களின் விற்பனைக்கு அதன் உயரிய விலை ஓர் பெரிய காரணமே இல்லை என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இருப்பினும், மக்கள் ஏன் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர் என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம்?, மின் வாகனங்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

ஆம், பெட்ரோல் பங்க்குகள் இருப்பதைப் போல் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் போதிய அளவில் இல்லை. இதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இப்போதே இவை கணிசமாக உயர தொடங்கியிருக்கின்றன. இத்தகைய ஓர் முயற்சியிலேயே இபைக்கோ நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. நிறுவனம் சுமார் ஒரு லட்சம் அளவிலான அதிநவீன மின் வாகன சார்ஜிங் மையங்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

நாட்டின் ஏழு முக்கிய நகரங்களை இதற்காக நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இங்கு மட்டுமே முதல் கட்டமாக அதி நவீன சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சார்ஜிங் மையங்களை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெறும் 7 நகரங்களுக்கு 1 லட்சம் சார்ஜிங் மையம் என நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருப்பது இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

இந்த அறிவிப்பின் வாயிலாக ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஓர் மின் வாகன சார்ஜிங் மையம் பயன்பாட்டிற்கு வருவது உறுதியாகியுள்ளது. இவ்வாறு பெருமளவில் சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வருமானால் மக்கள் நிச்சயம் மின் வாகன பயன்பாட்டிற்கு எந்தவொரு தயக்கமும் இன்றி மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

எளிதில் சார்ஜிங் மையங்களைக் கண்டறியும் வகையில் செயலி மற்றும் இதன் வாயிலாகவே சார்ஜிங்கிற்கான கட்டணத்தை செலுத்தும் வசதி ஆகியவற்றையும் இ-பைக்கோ நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த செயலி வாயிலாக பல்வேறு தகவல்களை அதன் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

இபைக்கோ நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, புனே, பெங்களூரு, இந்தூர், புது டெல்லி, அமிர்தரஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களையே தேர்வு செய்திருக்கின்றது. இந்த நகரங்களிலேயே தனது ஒரு லட்சம் மின் வாகன சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

3 பின் பவர் கனெக்டர் மற்றும் 50Hz AC, 190V-240V ரேஞ்ஜ் கொண்ட மின்சார சார்ஜிங் மையத்தையே நிறுவனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அவுட் புட் 16A/3.3kW ஆகும். இது மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ வசதிக் கொண்ட சார்ஜிங் மையம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப ரொம்ப தைரியமா மின் வாகனங்களை இனி வாங்கலாம்... 500 மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம்... முன்னணி நிறுவனம் அதிரடி!

இதுமாதிரியான ஓர் நடவடிக்கையில் இபைக்கோ நிறுவனம் மட்டுமின்றி முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனம் மிக விரைவில் நாடு முழுவதும் விரைவில் சார்ஜிங் மையங்களை திறக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதற்காக நிறுவனம் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கின்றது. இதன் வாயிலாகவே நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை ரிலையன்ஸ் ஜியோ உருவாக்க இருக்கின்றது.

Most Read Articles

English summary
Ebikego to install one lakh most economical iot enabled smart charging stations in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X