Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் உயர்வால் சூடுப்பிடிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! ஒரேடியாக 170 சதவீதம் அதிகரிப்பு!
கடந்த 2021 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பயத்தினால் பொதுமக்கள் பொது வாகன போக்குவரத்துகளை பயன்படுத்த இன்னமும் அச்சப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். இதன் காரணமாக புது வாகனங்களை வாங்குவது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குறைந்த செலவில் வாங்கக்கூடிய இருசக்கர வாகனங்களின் விற்பனை வேகமெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் & டீசல் விலை அதிகரிப்பு வழக்கத்தை காட்டிலும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

இதனை வெளிக்காட்டுவதாகவே எலக்ட்ரிக் டூ-வீலர்களின் விற்பனை கடந்த மாதத்தில் இருந்துள்ளது. இதனால் புது புது எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இதுகுறித்த லிஸ்ட்டில் பார்க்க முடிகிறது. இந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் புதிய என்ஒய்எக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருந்த இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 2,201 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. வெறும் 614 ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சுமார் 258.5 சதவீதம் அதிகமாகும்.

ஹீரோ எலக்ட்ரிக் பிராண்டிற்கு சரியான போட்டியாக விளங்கி வரும் ஒகினாவின் விற்பனை உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 2020 பிப்ரவரியை காட்டிலும் குறைவான அளவிலேயே (59.5%) அதிகரித்துள்ளது. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஒகினவா கடந்த மாதத்தில் 1,059 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.

இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ரூ.1 லட்சம் வரையில் சிறப்பு பரிசு சலுகைகளை ஒகினவா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களுக்கு அடுத்து அதிகளவில் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

2020 பிப்ரவரியில் வெறும் 286 ஆம்பியர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் கிட்டத்தட்ட 180 சதவீதம் அதிகமாக 800 ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன. ஏத்தர் எனர்ஜி கடந்த மாதத்தில் விற்பனை செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 624 ஆகும்.

இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் புரெனர்ஜி என்ற புதிய நிறுவனம் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த பிராண்டில் இருந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என்பது கூட சரியாக தெரியவில்லை. ஆனால் கடந்த மாதத்தில் 404 யூனிட் வாகனங்களை இந்த நிறுவனம் விற்றுள்ளது.

இவற்றிற்கு அடுத்துள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் 300க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வாகனங்களை விற்றுள்ளன. இதில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோவும் அடங்குகின்றன.

வழக்கமாக டிவிஎஸ் ஐக்யுப்-ஐ காட்டிலும் பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக் தான் அதிகளவில் விற்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நிலை அப்படியே தலைக்கீழாக இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 6,059 எலக்ட்ரிக் டூ-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2020 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 2,300க்கும் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.