Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான வசதிகளுடன் மேட்-இன்-இந்தியா இசைக்கிள்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
அட்டகாசமான சிறப்பு வசதிகளுடன் மேட்-இன்-இந்தியா இ-பைக் ஒன்று விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் இ-மோட்டாராட். இது ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தனது இரண்டாம் இ-பைக் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்த தற்போது தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி-ரெக்ஸ் எனும் இ-பைக்கையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது முடிவிற்கு பின் இந்த இ-சைக்கிளை அது களமிறக்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் முதல் அறிமுகம் இஎம்எக்ஸ் ஹார்ட்கோர் டிரெய்ல் இ-பைக்காகும். இதனைத் தொடர்ந்தே தற்போது டி-ரெக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த இ-சைக்கிள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு, தினந்தோறும் பயன்படுத்தும்போது சிறுதுளியளவும் களைப்பை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை இ-சைக்கிளில் தயாரிப்பு நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

மோனோஷாக் சஸ்பென்ஷன், மிருதுவான இருக்கை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் மோசமான சாலையில்கூட சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கக் கூடியவை. இந்த சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

எனவே இச்சைக்கிளை ஒரு முறை பயன்படுத்தினால் ருசி கண்ட பூனையைப் போல் தினமும் இச்சைக்கிளைப் பயன்படுத்தும் ஆர்வம் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும்.

இந்த அதிகபட்ச வேகத்திற்காக 250W திறன் கொண்ட பிரஷ்லெஸ் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 374 வாட்கள் (watts) வரையிலான திறனை வெளிப்படுத்தக் கூடியது. இது 0.5 பிஎஸ் திறனுக்கு சமம் ஆகும். இத்துடன், மிக இலக எடைக் கொண்ட அலுமினியம் ஃபிரேமே இச்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆகையால், இதனைக் கையாள்வது என்பது மிக சுலபமானதாகும். இத்துடன், இச்சைக்கிளின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 36V-7.8Ah திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த பேட்டரிகளை எந்த பிளக் பாயிண்டில் வைத்து வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை இமோட்டாராட் வழங்கியிருக்கின்றது. ஆகையால், சார்ஜ் மையத்தில்தான் சார்ஜ் செய்யவேண்டும் என்ற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகையால்,அலுவலகம் அல்லது வீடுகளையே நமக்கான சார்ஜ் மையமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதுதவிர, பேட்டரியின் சார்ஜ் அளவு, வேகம், பெடல் அசிஸ்டின் லெவல், இடைவெளி தூரம் என பலவற்றைக் காண்பிக்கக் கூடிய எல்சிடி திரை, எல்இடி மின் விளக்கு மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் பிரத்யேக வசதியாக 7 ஸ்பீடு கொண்ட ஷிமானோ டிரெயலியர் வன்பொருள் கருவியாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இந்த தனித்துவமான வசதிகளைக் கொண்ட டிரெக்ஸ் இ-பைக்கை ரூ. 45 ஆயிரம் என்ற விலையில் விற்பனைச் செய்ய இமோட்டாராட் திட்டமிட்டிருக்கின்றது. ஆன்லைனில் தற்போது புக்கிங் நடைபெற்று வருகின்றது. அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும் நோக்கில் இந்த இ-பைக்கிற்கு பிரத்யேக இஎம்ஐ திட்டத்தையும் அது அறிவித்திருக்கின்றது.