Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகின் முதல் பெடல் வசதியுடைய இ-பைக்... ஆச்சரியமளிக்கும் இன்னும் பல வசதிகளுடன்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
உலகின் முதல் பெடல் வசதிக் கொண்ட மின்சார பைக்கை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்து காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. இதனால், உலக நாடுகள் அனைத்திலும் புதுமுக மின்வாகனங்களின் அறிமுகம் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையில், இ-ராக்கிட் எனும் புதுமுக மின்சார மோட்டார்சைக்கிள் அறிமுகமாகியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இ-ராக்கிட் சிஸ்டம்ஸ் ஜிஎம்பிஎச் (eROCKIT Systems GmbH) எனும் நிறுவனமே இந்த மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இந்த வாகனத்தை இதுவரை எந்தவொரு மோட்டார்சைக்கிளிலும் இல்லாத ஓர் வசதியுடன் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

அதாவது, மிதிவண்டிகளில் இருப்பதைப் போன்று பெடலிங் வசதியுடன் இவ்வாகனம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. உலகிவேயே இவ்வசதியைப் பெரும் முதல் மோட்டார்சைக்கிள் இதுவாகும். எனவேதான் உலகளவில் மின் வாகன பிரியர்களை இந்த இ-ராக்கிட் மின்சார பைக் அதிகம் கவர்ந்திருக்கின்றது.

இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக 11,850 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 9.88 லட்சம் ஆகும். இது தோராயமான மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் ஓர் இலகு ரக வாகனமாக அறிமுகம் செய்திருக்கின்றது.

இதனை மின்சார இல்லையென்றாலும் இயக்க முடியும். இதற்காகவே பிரத்யேகமாக பெடலிங் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை ஹைபிரீட் மின்சார சைக்கிளைப் போன்று பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாகனத்தை இலகு ரக வாகனமாக இதனை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியிருப்பதால், இதனை பெடல் செய்து இயக்குவது என்பது மிக சுலபமான செயலாக அமைந்திருக்கின்றது.

இதன் மிக குறைந்த எடைத் தன்மைக்காக அதிக உறுதித் தன்மைக் கொண்ட அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, உறுதியானது. அதேசமயம், மிக மிக எடைக் குறைவானதும்கூட. தொடர்ந்து மின்சார பைக்கின் கவர்ச்சி தன்மைக்காக ரெட்ரோ லுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கேற்ப மின் விளக்கு மற்றும் பிற உடற்கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒற்றை பயணி மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. இப்பைக்கிற்கான பேட்டரிகள் இருக்கைக்கு முன்பு மைய பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இங்கே மின்சார பைக்கின் இயக்கத்திற்கான பல்வேறு முக்கிய கூறுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், அவற்றை வெளியில் காண முடியாத வகையில் கவசம் (மறைப்பு) மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதில், 16கிலோவாட் திறன் கொண்டடட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு தேவையான மின்சார திறனை 6.6 kWh பேட்டரி வழங்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதேசமயம், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 80 ஆகும். இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள் இந்த மின்சார பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே அவை ஆகும். இதில், ஈகோ மோடில் பயணிக்கும்போது அதிக தூர ரேஞ்ஜை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை தற்போது ஜெர்மன் நாட்டில் மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், இதன் இந்திய வருகை நடைபெறாத ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.