ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

தன்னுள் ஏற்பட்ட மின்சார கோளாறுகளைத் தானாகவே சரி செய்துகொள்ளும் வசதியுடன் கோமகி உயர்-வேக எஸ்இ மின்சார ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி, அதன் புதுமுக மின்சார ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்-வேக திறன் கொண்ட எஸ்இ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் அனைத்து வயதினருக்குமானது என கோமகி தெரிவித்துள்ளது.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

கார்னெட் சிவப்பு, அடர் நீலம், மெட்டாலிக் கோல்டு மற்றும் ஜெட் பிளாக் என நான்கு விதமான நிற தேர்வில் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விலையும் சற்று குறைவானதாகவே காட்சியளிக்கின்றது. எக்ஸ்-ஷோரும் மதிப்பில் கோமகி எஸ்இ மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 96 ஆயிரம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

இந்த விலையிலேயே எக்கசக்க சிறப்பு வசதிகளை நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கியிருக்கின்றது. இதில் மிக முக்கியமான அம்சமாக, தனக்குள் உருவான கோளாறை தானாகவே சீர் செய்து கொள்ளும் வசதி அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

அதாவது, தனக்குள் ஏற்படும் மின்சார கோளாறுகளைத் தானாகவே அறிந்துக் கொண்டு தன்னிச்சையாக சரி செய்து கொள்ளும் வசதியே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதில் பயணிப்போர் மின்சார கோளாறைப் பற்றிய கவலையின்றி பயணிக்கலாம்.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

இதுமட்டுமின்றி, மல்டி மீடியா வசதிக் கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கர், பகல் நேர எல்இடி மின் விளக்கு, செல்போன் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், க்ரூஸ் கன்ட்ரோல், மூன்று விதமான ரைடிங் மோட்கள், ரிமோட் லாக்கிங் வசதி, திருட்டு பயத்தைத் தவிர்க்கக் கூடிய பிற சில வசதிகள் என பன்முக சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் கோமகி வழங்கியிருக்கின்றது.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

மேலும், இதன் முழு ரேஞ்ஜ் திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் கோமகி எஸ்இ மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த திறனை வழங்குவதற்கு ஏற்ப லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிப்பேரை தானாகவே சரி செஞ்சிக்கும்! ஆச்சரியமளிக்கும் வசதிகளுடன் கோமகி எஸ்இ உயர்-வேக மின்சார ஸ்கூட்டர்!!

இது 3 ஆயிரம் வாட் திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான முழு மின்சார திறனையும் வழங்கும். இந்த மோட்டார் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இதனை உயர்-வேக மின்சார ஸ்கூட்டர் என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுகின்றது.

Most Read Articles

English summary
EV Maker Komaki Launches SE High-Speed e-Scooter With Self Repair Feature. Read In Tamil.
Story first published: Wednesday, February 10, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X