5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் வழக்கத்தை காட்டிலும் 5 மடங்கும் அதிகமாக ரூ.25 கோடி வரையில் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஜிப் எலக்ட்ரிக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

தற்சமயம் இந்தியாவின் முதன்மையான இவி லாஜிஸ்டிக்ஸ் தொழிற்நுட்ப, டெலிவிரி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஜிப் எலக்ட்ரிக் விளங்கி வருகிறது. இந்தியாவில் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக இவி டி2சி வணிகத்தை துவங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்த ஜிப் எலக்ட்ரிக் தற்போது நடப்பு நிதியாண்டின் வருவாய் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் அதன் முதலீடு தற்போதைய முதலீட்டை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக ரூ.25 கோடியாக உயரும் என்று நம்புகிறது. கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில், நிதி சேகரிப்பின் A சுற்றில் கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலர்களை இந்த குருக்ராமை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் சேகரித்திருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.52 கோடியை தாண்டி செல்கிறது.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

இதில் இருந்து, இந்திய இவி துறையில் அதிக பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது உறுதியாகிறது. டெல்லி என்சிஆர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிக்பேஸ்கெட், க்ரோஃபெர்ஸ், அமேசான், ராபிடோ, ஃப்ளிப்கார்ட், ஸ்பென்சர்ஸ், சிட்டிமால், டீல்ஷேர் போன்ற மளிகை சாமான்கள், மருந்துகள், உணவு மற்றும் மின்-வணிக நிறுவனங்களுடன் இணைந்து தற்சமயம் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் பணியாற்றி வருகிறது.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன. இந்தியா முழுவதுமாக கையிருப்பு இ-ஸ்கூட்டர்களை அடுத்த 18 மாதங்களில் 10 ஆயிரமாக அதிகரிக்க இந்த நிறுவனம் திட்டங்களை தீட்டி வருகிறது. தொழிற்நுட்பங்களை கண்டறிதல் மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக தற்போதுவரையில் மட்டும் 450-500 பணியாளர் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் உள்ளனர்.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

கடந்த நிதியாண்ட்டில் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு ரூ.5 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்தது. ஆனால் நடப்பு நிதியாண்டினை ரூ.25 கோடி வருவாய் உடன் முடிக்க தருவாயை ஜிப் எலக்ட்ரிக் எதிர்நோக்குகிறது. இதுகுறித்து ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓ-வுமான ஆகாஷ் குப்தா கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டின் ரூ.5 கோடி வருவாயில் இருந்து, இந்த நிதியாண்டில் எங்கள் வருவாய் 5 மடங்கு உயர்ந்து ரூ.25 கோடியாக கிடைக்கவுள்ளதை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

தற்போதைய மாதந்திர தொடர் வருவாயின்படி பார்க்கும்போது, ஜிப் எலக்ட்ரிக் நடப்பு நிதியாண்டை 6 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.45 கோடி) வருடாந்திர தொடர் வருவாய் உடன் முடிக்கும் என எதிர்பார்க்கிறது. பி2பி மளிகை பொருட்கள் மற்றும் பிற ஹைப்பர்லோக்கல் டெலிவிரி நிறுவனங்களிடையே பிரபலமடைந்துவரும் ஸ்மார்ட் பிளாட்ஃபார்ம் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

மேலும், எங்களது எலக்ட்ரிக் பகிர்வு இயக்க பிளாட்ஃபாரத்தில் எலக்ட்ரிக் வாகனத்தில் செல்ல விரும்பும் டெலிவிரி நிர்வாகிகள் மத்தியிலும் இந்த ஸ்மார்ட் பிளாட்ஃபாரம் வரவேற்பை பெறு வருகிறது, வர்த்தகமானது சரியான பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதாக உள்ளதா என்பது முக்கியமானது. வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்தாலும், சமூக அக்கறையில் சிறிதாவது பங்கு இருக்க வேண்டும்.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

சிறந்த மற்றும் பெரிய எலக்ட்ரிக் பகிர்வு இயக்க தேர்வாக இருக்கிறோம், இருப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவி தொழிற்நுட்ப பிளாட்ஃபாரத்துடன் மொத்த எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 1 லட்சமாக கொண்டுவர இருக்கிறோம்" என்றார். ஏற்கனவே கூறியதுபோல் இந்தியாவிலேயே முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக டி2சி வணிகத்தை துவங்க உள்ளதாக ஜிப் எலக்ட்ரிக் சமீபத்தில் அறிவித்திருந்தது.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

டி2சி என்பது ‘நேரடியாக வாடிக்கையாளர்களுடன்' என்பதன் சுருக்கமாகும். அதாவது மற்றொரு காப்பிரேட் நிறுவனத்துடன் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுடனே வணிகத்தை மேற்கொள்ள ஜிப் எலக்ட்ரிக் தயாராகி வருகிறது. தன்னால் முடிந்த அளவிற்கு அனைத்து துறை வணிகங்களிலும் போக்குவரத்தில் 100% மின்மயமாக்கலான தேடலில் ஜிப் எலக்ட்ரிக் உள்ளது.

5 மடங்கு அதிக வருவாய் உடன் ஜிப் எலக்ட்ரிக்!! இ-ஸ்கூட்டர் படை விரிவடைகிறது!

மின்வணிக நிறுவனங்கள், மின் மளிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள், சிறு சிறு கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களுக்காக லாஸ்ட்-மைல் டெலிவிரிகளை ஜிப் எலக்ட்ரிக் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் சில நகரங்களில் வாடகை இ-ஸ்கூட்டர் சேவையினையும் வழங்கி வருகிறது. இதற்காகவே நீக்கக்கூடிய பேட்டரி உள்கட்டமைப்பு கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது.

Most Read Articles
English summary
Electric Shared Mobility startup Zypp Electric expects 5x jump in Revenues, to cross INR 25 cr in FY22, plans to deploy 100k EVs in 2022
Story first published: Tuesday, December 28, 2021, 2:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X