75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுப்படவுள்ளதாக தனது திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்த இவிட்ரிக் (EVTRIC) நிறுவனம் தற்போது அதன் முதல் இரு இவி-களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆக்ஸிஸ் மற்றும் ரைட் என்கிற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவை இரண்டும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடியவை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகும். இவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.64,994 மற்றும் ரூ.67,996 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரை கவர வந்துள்ள இந்த இ-ஸ்கூட்டர்கள், அதிலும் குறிப்பாக இளம்பெண்களை டார்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதன் தோற்றத்தை பார்க்கும்போதே தெரிய வருகிறது.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

இதில் ஆக்ஸிஸ் இ-ஸ்கூட்டர் மெர்குரி வெள்ளை, பாரசீக சிவப்பு, எலுமிச்சையின் மஞ்சள் மற்றும் பேரரசர் க்ரே என்ற நான்கு விதமாக நிறங்களில் கிடைக்குமாம். மறுபக்கம், ரைட் ஸ்கூட்டருக்கு அடர் செருலியன் நீலம், பெர்சியன் சிவப்பு, சில்வர், நோபல் க்ரே மற்றும் மெர்குரி வெள்ளை ஆகிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

விருப்பமுள்ளவர்கள் quickrycart.com, atiyaselectric.com அல்லது ewheelers.in என்கிற இணையத்தள பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்யலாம். நமது சென்னையில் இவற்றை டெலிவிரி எடுக்க முடியாது.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

பெங்களூர், டெல்லி, திருப்பதி, ஹைதராபாத், புனே, அவ்ரங்காபாத் மற்றும் குர்கான் உள்ளிட்ட நகரங்களில் இவிட்ரிக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடுமையங்கள் உள்ளன. கவலை வேண்டாம், அடுத்த ஆறு மாதங்களில் நமது தமிழகம் உள்பட 28 மாநிலங்களில் புதியதாக சந்தையை விரிவுப்படுத்த இவிட்ரிக் திட்டமிட்டுள்ளது.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், வாகனத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதனை வழக்கமான சார்ஜரை கொண்டு முழுவதுமாக சார்ஜ் செய்ய 3.5 மணிநேரங்கள் தேவைப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பேட்டரி தொகுப்பு பொருத்தப்படும் 250வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகமான 25kmph-ஐ உறுதிப்படுத்துகிறது. மொத்த வேகமே இவ்வளவு தான் என்பதால் இவற்றை ஓட்ட ஓட்டுனர் உரிமம் எதுவும் தேவையில்லை.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

இவிட்ரிக் இ-ஸ்கூட்டர்களின் முக்கிய அம்சங்களாக எல்இடி ஹெட்லைட்கள், 12 இன்ச்சில் ட்யுப்லெஸ் டயர்கள், சைடு ஸ்டாண்ட் சென்சார், ரிவர்ஸ் பார்க்கிங் உதவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 190மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

75கிமீ ரேஞ்ச் உடன் இவிட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ரூ.65 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிக்கு 2 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இ-ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி சைக்கிள்கள், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியிலும் இவிட்ரிக் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles

English summary
EVTRIC Axis, Ride electric scooters with 75km range, detachable batteries launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X