ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

ஜாவா பெராக்கின் பிரதான பெயிண்ட் தேர்வான மேட் கருப்பு நிறத்திற்கு ஜாவா கிளாசிக் பைக் ஒன்று, அங்கீகாரம் பெற்ற டீலர்களினால் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

Image Courtesy: agozee_kustoms

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

பொதுவாக ஜாவா என அழைக்கப்படும் ஜாவா கிளாசிக் மாடல் கருப்பு மற்றும் மெரூன் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. க்ரே நிறத்திலும் ஜாவா கிளாசிக் கிடைக்கிறது. ஆனால் க்ரே நிறத்தில் ஜாவா பைக்கை அனைவராலும் பெற முடியாது.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

இவ்வாறு ஜாவா கிளாசிக் பைக்கிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர்த்து புதிய நிறத்தில் ஜாவா கிளாசிக் பைக் வேண்டும் என டீலர்களிடம் கூறினால், அவர்கள் அதற்கு ஏற்றப்படி கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் ஏதாவது ஒன்றின் உதவியுடன் பைக்கின் நிறத்தை மாற்றி கொடுப்பார்கள்.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

அவ்வாறு அங்கீகாரம் பெற்ற டீலர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஜாவா கிளாசிக் பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். இந்த ஜாவா கிளாசிக் பைக்கை இவ்வாறான தோற்றத்திற்கு மாற்றியுள்ள கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் பெயர் அகோஸி கஸ்டம்ஸ் ஆகும்.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

குஜராத்தில் உள்ள சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் இவ்வாறான கஸ்டமைஸ்ட் வாகனங்களினால் சுற்றுவட்டார பகுதியில் பிரபலமானதாக விளங்குகிறது. இந்த ஜாவா கிளாசிக் பைக்கை சீமா பைக்ஸ் என்ற ஜாவா இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் மையத்திற்காக அகோஸி கஸ்டம்ஸ் மாடிஃபை செய்துள்ளது.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

இந்த மாடிஃபை பணிகளுக்கு மொத்தமாக ரூ.15,000 செலவாகியுள்ளது. பைக்கில் மிக முக்கியமான ஹைலைட்டாக மேட் ப்ளாக் நிற பெயிண்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ஹெட்லைட், முன் & பின்பக்க ஃபெண்டர்கள், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகளின் மூடி, பெட்ரோல் டேங்க், ரேடியேட்டர், முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

இவற்றுடன் என்ஜின், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் குழாயும் கருப்பு நிறத்தில் உள்ளன. ஹெட்லைட் வளையம், டர்ன் இண்டிகேட்டர்கள், பின்பக்க சஸ்பென்ஷன் மற்றும் கிக்-ஸ்டார்ட் லிவர் உள்ளிட்டவை மட்டுமே மெட்டாலிக் தொடுதல்களை பெற்றுள்ளன.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

ஜாவா கிளாசிக் பைக்கிற்கு ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன் & பின்பக்க மட்கார்டில் வழங்கப்படும் லைன்கள் தான் அடையாளம். அது இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தோமேயானால், ஜாவா பெராக் பைக் உங்களது ஞாபகத்திற்கு வரலாம். ஏனெனில் அந்த பைக்கில் தான் இவ்வாறான பெயிண்ட் வழங்கப்பட்டு வருகிறது. கிளாசிக்கிற்கு வழங்கப்படும் கருப்பு நிறத்துடன் ஒப்பிடுகையில் இந்த மேட் ப்ளாக் பெயிண்ட்டில் பளபளப்பான பாகங்கள் குறைவு.

ஜாவா பெராக்கை விட ஸ்டைலா இருக்கே!! ஜாவா கிளாஸிக்கின் புதிய தோற்றம்..!

ஸ்டாக் ஜாவா கிளாசிக்கின் கருப்பு நிற பெயிண்ட் தேர்வில் முன்பக்க சஸ்பென்ஷன், பெட்ரோல் டேங்க், என்ஜின், எக்ஸாஸ்ட் குழாய், பின்பக்க சஸ்பென்ஷன் மற்றும் ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவை பளபளப்பான நிறத்தில் மின்னி கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான மினுமினுப்புகளை விரும்பாமல், பைக்கின் கம்பீரத்தை மட்டுமே வேண்டுவோர்க்கு இந்த மேட் கருப்பு நிற பெயிண்ட் சரியான தேர்வே.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Classic Matte Black Colour Inspired By Perak – Offered At Authorized Dealer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X