சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால் மற்ற ஆண்டுகளை போல் தீபாவளியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த வருடம் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதால், மக்கள் ஆராவாரத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது. பண்டிகை என்றாலே புதிய பொருட்களை வாங்குவதில் அனைவரும் விரும்புவார்கள்.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

கடந்த ஆண்டில் சில பாதுகாப்பு விதிமுறை கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் சிலரால் புதிய வாகனங்களை தங்களது கேரேஜில் சேர்க்க முடியாமல் போயிருக்கலாம். அத்தகையவர்கள் இந்த தீபாவளியில் புதிய வாகனத்தை டெலிவிரி பெற்று மகிழுங்கள். அத்தகையவர்களுக்காக முன்னணி பிராண்ட்களில் இருந்து சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையில் இருக்கும் சில மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

டிவிஎஸ் ரைடர்

டிவிஎஸ் மோட்டாரின் மிக சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்று. இதை முதலில் பார்ப்பதற்கு காரணம், பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலையில் இந்த புதிய டிவிஎஸ் பைக் களமிறக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடரின் ஆரம்ப விலையாக ரூ.77,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் பைக்கில் ட்ரம் ப்ரேக்குகள் மட்டுமே வழங்கப்படும்.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

ரூ.85,469 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் டிஸ்க் வெர்சனில் இந்த பைக்கை வாங்கலாம். ரைடரின் மிக முக்கிய சிறப்பம்சமாக, ஈக்கோ & பவர் என்கிற இரு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் முழு-எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் அமைதியான என்ஜின் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களும் டிவிஎஸ் ரைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

யமஹா ஆர்15 & ஆர்15 எம்

இந்தியாவில் யமஹா பிராண்டிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து கடைசியாக நான்காம் தலைமுறை ஆர்15 மற்றும் ஆர்15 எம் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீபாவளி பண்டிக்கையை சிறப்பாக்க ஏற்ற மோட்டார்சைக்கிள்களுள் இவையும் அடங்குகின்றன.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

ஆர்15 வி4-ஐ (ரூ.1.68 லட்சம்) காட்டிலும் அதன் செயல்திறன்மிக்க வெர்சனாக கொண்டுவரப்பட்டுள்ள ஆர்15 வி4 எம் பைக்கின் விலை (ரூ.1.79 லட்சம்) சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஆர்15 எம் மாடலில் குயிக் ஷிஃப்டர் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

கேடிஎம் ஆர்சி125 & ஆர்சி200

இந்த புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகள் டிசைனில் மட்டுமின்றி, இயந்திர பாகங்களிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்று வந்துள்ளன. குறிப்பாக இவற்றின் முன்பக்கம் காற்று இயக்கவியலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய மாடல்களின் எடையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

இதனால் இந்த கேடிஎம் ஆர்சி பைக்குகளின் பந்தய களத்திற்கான பண்பு மேம்பட்டுள்ளது. புதிய ஆர்சி200-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான ஹேண்ட்லிங் உடன், மிட்-ரேஞ்ச் செயல்திறனில் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டிள்ள இந்த பைக்குகளின் காற்று இயக்கவியல் பண்பும் மேம்பட்டுள்ளதால் நிச்சயம் இவை அட்டகாசமான ரைடிங் பண்பை வழங்கும்.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக விளங்கும் கிளாசிக் 350-இன் புதிய தலைமுறை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை பைக்கின் அடிப்படையாக முற்றிலும் புதிய ஜே-பிளாட்ஃபாரத்தை தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதே ப்ளாட்ஃபாரம் தான் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350 பைக்கின் வடிவமைப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

புதிய கிளாசிக் 350-இன் வழக்கமான கம்பீர தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும், பைக் முற்றிலுமாக புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் புதிய இயந்திர பாகங்கள் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. 2021 கிளாசிக் 350-இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

ஹோண்டா சிபி200எக்ஸ்

வழக்கமான ஸ்போர்ட்ஸ் & நாக்டு மோட்டார்சைக்கிள்களில் இருந்து சற்று வித்தியாசமாக அட்வென்ச்சர் ரக பைக்கை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், ஹோண்டா சிபி200எக்ஸ்-ஐ ஒரு கண்ணோட்டம் பாருங்கள். ஹோண்டாவின் ரெட் விங் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிபி200எக்ஸ்-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.1,44,500 ஆக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிர்ணயித்துள்ளது.

சந்தையில் சமீபத்தில் அறிமுகமான டாப் பிராண்ட்களின் பைக்குகள்!! தீபாவளிக்கு புக்கிங் செய்ய ஏற்ற மாடல்கள்!

மூன்று வண்ண நிறங்களில் கிடைக்கும் இந்த பைக்கில் ஹோண்டா ஹார்னெட் 2.0-இல் பொருத்தப்படும் அதே 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 17.3 எச்பி மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துவரும் இது ஹோண்டா டீலர்ஷிப்களில் அதிக பேரால் விசாரிக்கப்படும் மாடலாக உள்ளது.

Most Read Articles

English summary
Top 5 New Bikes To Consider Buying This Diwali.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X