பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இந்தியாவில் நேரடி போட்டி மாடல்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், பஜாஜ் டோமினார் 400க்கு மாற்று தேர்வாக சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் கேடிஎம் 390 ட்யூக் உள்ளிட்டவை உள்ளன.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இவற்றின் மறைமுகமான போட்டியினை சமாளிக்க டோமினார் மாடலின் அப்டேட் வெர்சனை களமிறக்க பஜாஜ் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த வகையில் அறிமுகமாக உள்ள புதிய டோமினார் 400 பைக் தான் டீலர்ஷிப் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

Image Courtesy: Dino's Vault

டினோவின் வால்ட் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் புதிய டோமினார் 400 பைக்கில் குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. புதிய நிறத்தேர்வையும், அப்டேட்டான கிராஃபிக்ஸையும் இந்த பைக் பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

தற்சமயம் அரோரா பச்சை மற்றும் வினே கருப்பு என்கிற இரு நிறத்தேர்வுகளில் புதிய டோமினார் 400 விற்பனை செய்யப்படுகிறது. புதிய பெயிண்ட் தேர்வுகளுடன் 2022 டோமினார் 400-இல் கொண்டுவரப்படும் மற்ற அப்டேட்களாக புதிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் கை விரல் பாதுகாப்பான் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இந்த அம்சங்களை இந்த வீடியோவில் உள்ள புதிய டோமினார் 400 பைக்கில் பார்க்க முடிகிறது. ஆனால் இவை நிலையான தேர்வாக வழங்கப்படுமா அல்லது கூடுதல் ஆக்ஸஸரீஸ் தேர்வாக கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. மேலும் தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்ற வசதிகளை இந்த டோமினார் மாடலில் புதியதாக கொண்டுவர பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முயற்சிக்கும்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

டோமினார் 400 பைக்கின் தற்போதைய எல்சிடி வேகமானியில் இணைப்பு வசதிகள் எதுவும் வழங்கப்படுவது இல்லை. ஆனால் இணைப்பு வசதிகல் தற்சமயம் சிறிய என்ஜின் பைக்குகளில் கூட அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இணைப்பு வசதிகளை புதிய டோமினார் 400-லும் எதிர்பார்க்கிறோம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இவை தவிர்த்து மற்ற அம்சங்கள் அனைத்தும் அப்படியே தான் தொடரப்படும் என தெரிகிறது. புதிய அப்டேட்களினால் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டோமினார் 400 பைக்கின் விலை அதிகரிக்கப்படலாம். தற்சமயம் 400சிசி பஜாஜ் டோமினாரின் ஆரம்ப விலை ரூ.2.12 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 ஆனது பேனல்கள் அதிகளவில் கொண்டில்லாத ஸ்போர்ட்ஸ் டூரிங் மோட்டார்சைக்கிளாகும். முன்பக்கத்தில், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் மோட்கள், பொசிஷன் விளக்கு, லோ பீம் மற்றும் ஹை பீம் உள்ளிட்டவற்றுடன் முழு-எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு இந்த 400சிசி பைக்கில் வழங்கப்படுகிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இவற்றின் மூலமாக பைக்கை எந்தவொரு பகுதிக்கும் பயமின்றி எடுத்து செல்ல முடியும். தொலைத்தூர பயணங்களின் போது தேவைப்படும் கயிறும் இந்த பைக்குடன் கொடுக்கப்படுகிறது. அகலமான ஹேண்டில்பார் டோமினார் 400-ஐ நீண்டத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விளங்க வைக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

தற்சமயம் டோமினார் 400-இல் 373.3சிசி, லிக்யுடு-கூல்டு, ட்ரிபிள் ஸ்பார்க், ஒற்றை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினிலும் புதிய வெர்சனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதிகப்பட்சமாக 8800 ஆர்பிஎம்-இல் 40 பிஎஸ் மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

இவற்றுடன் மென்மையான கியர் மாற்றத்திற்காக ஸ்லிப்பர் க்ளட்ச்சும் கொடுக்கப்படுகிறது. மேலும் இது என்ஜின் ப்ரேக்கிங்கின் போது உற்பத்தி செய்யப்படும் வலுவான சக்திகளில் இருந்து பாதுகாப்பதன் மூலம் டிரான்ஸ்மிஷனின் நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

பீம் வகையை சேர்ந்த பெரிமீட்டர் ஃப்ரேமில் உருவாக்கப்படும் டோமினார் 400-இல் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 43மிமீ-இல் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸின் பல-விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இருசக்கரங்களிலும், 320மிமீ மற்றும் 230மிமீ டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதியதாக இத்தனை அப்டேட்களா!! அறிமுகத்திற்கு முன்னதாக வீடியோ வெளியீடு!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் இ-ஸ்கூட்டரான சேத்தக்கிற்கு நமது சென்னையிலும் சமீபத்தில் முன்பதிவுகளை துவங்கி இருந்தது. ஆரம்பத்தில் புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இவை இரண்டுடன் நாக்பூர், அவுரங்காபாத், மைசூர் மற்றும் மங்களூர் என சமீபத்திய சென்னை, ஹைதராபாத் நகரங்களும் சேர்த்து மொத்தம் 8 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

English summary
First Exclusive Walkaround Video Of New 2022 Bajaj Dominar 400.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X