இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

2021ஆம் வருடம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் வந்துவிட்டது. இந்த ஆண்டில் எதிர்பார்த்ததை போல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு, ஒன்றிய & மாநில அரசாங்கங்கள் வழங்கிவரும் மானியங்கள் & சலுகைகளை தான் முக்கிய காரணமாக சொல்ல வேண்டும்.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

ஏனெனில் காற்று மாசு இல்லா போக்குவரத்தை கொண்டுவர மத்தியில் ஆளும் ஒன்றிய அரசாங்கம் முனைப்புடன் உள்ளது. 21ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் நுழைந்துவிட்டோம். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் முக்கிய 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

பஜாஜ் சேத்தக்

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரியில் சேத்தக் மாடலின் மூலம் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் அடியெடுத்து வைத்தது. பஜாஜ் சேத்தக், இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர் பெயாராகும். அதனை அப்படியே தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வைத்து கொண்டுள்ளது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரின் அர்பன் வேரியண்ட்டின் விலை ரூ.1.42 லட்சமாகவும், ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.1.44 லட்சமாகவும் உள்ளது. இந்த விலைகள் நகரத்தை பொறுத்து வேறுப்படலாம். முதலாவதாக புனே உள்பட சில நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் நமது சென்னையில் கடந்த செப்டம்பரில் துவங்கப்பட்டது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

ஏத்தர் 450எக்ஸ்

கிளாசிக் தோற்றத்தை கொண்ட சேத்தக்கை காட்டிலும் செயல்திறன்மிக்கதாக, அதேநேரம் ஸ்டைலிஷானதாக ஏத்தர் 450எக்ஸ் விளங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.32 லட்சமாக உள்ளது. இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 61 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

இதனை வீட்டு சுவர் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்தால், 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரம்ப ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 116 கிமீ ஆகும். அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 116 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

ஓலா எஸ்1 & எஸ்1 ப்ரோ

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தின் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சந்தையில் களமிறங்கியது. இந்த தினத்தில் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எஸ்1 வேரியண்ட்டின் விலை ரூ.1 லட்சம் என்கிற அளவில் உள்ளது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

அதுவே, பிரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.1.20 லட்சத்தை தாண்டுகிறது. இவற்றின் விலைகளும் நகரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதே தவிர்த்து, டெலிவிரி இன்னும் துவங்கப்படவில்லை. எப்போது துவங்கும் என்பதும் தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இதன் 2.9 kWh பேட்டரியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள 750 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

டிவிஎஸ் ஐக்யூப்

ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டர்களை போல், நமது தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப் ஆகும். ஆனால் முதலாவதாக பெங்களூருவிலும், டெல்லியிலும் தான் டிவிஎஸ் ஐக்யூப்பிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. ரூ.1.15 லட்சம் என்பது இதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக உள்ளது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

ஐக்யூப்பில் 1.4 kWh பேட்டரி தொகுப்பை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொருத்துகிறது. இதனை 80% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 5 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. இதன் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த டாடா பவர் நிறுவனத்துடன் டிவிஎஸ் மோட்டார் சமீபத்தில் கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

சிம்பிள் ஒன்

கடந்த சுதந்திர தினத்தின் போது, ஓலா எஸ்1 மாடலுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் சிம்பிள் ஒன் ஆகும். இதில் 4.8 kWh பேட்டரி தொகுப்பை பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பொருத்துகிறது.

இப்போதைய சூழலில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! சேத்தக் முதல் சிம்பிள் ஒன் வரையில்!

ஓலா எலக்ட்ரிக்கை போல் நமது தமிழகத்தில் தொழிற்சாலையை அமைத்துள்ள சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையினை ரூ.1.09 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மோட் இ -இல் சுமார் 236 கிமீ ரேஞ்ச் கிடைப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Most Read Articles

English summary
From Bajaj Chetak to Simple One, 5 best electric scooters.
Story first published: Sunday, December 12, 2021, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X