பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

பெட்ரோல் டூவீலருக்கு பதிலாக எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

கடந்த டிசம்பர் மாதம் சுமார் 4,500 யூனிட்களாக இருந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை, அதன்பின் வந்த ஜனவரி மாதம் 5,000-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் 6,000 யூனிட்களாக மேலும் அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் சோஹிந்தர் கில் இந்த தகவலை கூறியுள்ளார்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

பெட்ரோல் விலை உயர்வுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. பெட்ரோலில் இயங்க கூடிய இரு சக்கர வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. அந்த கணக்கீட்டை தெரிந்து கொண்டால், உங்களுக்கும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் மீது ஆர்வம் ஏற்படலாம்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

உதாரணத்திற்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை எடுத்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 60 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த மைலேஜ் தோரயமான கணக்குதான். சாலைகள், ஓட்டும் பழக்கம் ஆகியவற்றை பொறுத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மைலேஜ் இதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

சரி, ஹோண்டா ஆக்டிவா வாடிக்கையாளர் ஒருவர் தினமும் 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியதாக இருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்ப வேண்டும். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய், 94 ரூபாய் என்ற நிலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. நகரங்களை பொறுத்து பெட்ரோல் விலை மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

மறுபக்கம் ஹீரோ எலெக்ட்ரிக் ஹெச்எக்ஸ் (Hero Electric HX) ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறது. இதற்கு ஆகும் செலவு வெறும் 20 ரூபாய் மட்டும்தான். எனவே உங்களிடம் ஹோண்டா ஆக்டிவாவிற்கு பதிலாக ஹீரோ எலெக்ட்ரிக் ஹெச்எக்ஸ் இருந்தால், தினமும் 60 கிலோ மீட்டர் பயணிக்க வெறும் 10-12 ரூபாய் மட்டுமே செலவாகும்.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

தினமும் சுமாராக எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம்? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம். இதன் காரணமாகதான் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆனால் பெட்ரோலில் இயங்க கூடிய இரு சக்கர வாகனங்கள் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

அதனுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிகவும் குறைவுதான். எனினும் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவையை மக்கள் முழுமையாக உணர தொடங்கியுள்ளனர். எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Fuel Price Hike: Electric Two-wheelers See Rising Interest In India - Here Are The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X