மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.. எங்கு, என்ன சலுகை தெரிஞ்சா பொறாமப்படுவீங்க!

மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மிக அதிக தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் தேசத்தின் தலைநகரான டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்தது.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

பதிவு கட்டணம் ரத்து, வரி குறைப்பு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை (மானியம்) என அதிரடி சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் நாட்டின் மற்றுமொரு யூனியன் பிரதேசமான கோவாவிலும் இதேபோன்ற சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

பசுமை மற்றும் தூய்மையான இயக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் முதல் கட்டமாக வாங்கப்படும் 10 ஆயிரம் மின்சார இரு வாகனங்களுக்கு மட்டும் இச்சலுகையை வழங்க மாநிலம் திட்டமிட்டிருக்கின்றது. இதன்படி என்ன மாதிரியான சலுகைகள் எல்லாம் மின் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

சலுகைகள் பற்றிய விபரம்:

1. ஊக்கத்தொகை; செல்போன் நிறுவனங்கள் பயனர்களின் பழைய போன்களை வாங்கிக் கொண்டு புதிய போனின் விலையில் குறைப்பது போன்ற சலுகை வழங்கப்படும்.

2. பதிவு கட்டணம் கிடையாது. இதனால், மின்சார வாகத்தின் விலையில் இருந்து 5 சதவீதம் வரை குறையும். ஆகையால், புதிய மின் வாகனங்களின் விலை மலிவானதாக மாறும்.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

3. மானியம், இதன் மூலம் வாகனத்தின் விலை மேலும் பல மடங்கு குறையும். விலை மற்றும் மின் வாகனத்தின் திறன் வெளிப்பாட்டைக் கொண்டு மானியம் வழங்கப்படும்.

4. பழைய வாகனங்களை அழிப்பிற்கு அளித்துவிட்டு புதிய மின்சார வாகனத்தை வாங்கும்போது மிகப்பெரிய தொகை ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்பட இருக்கின்றது.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

மேற்கூறிய இந்த சலுகைகளையே கோவா யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக வாங்கப்படும் 10 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இந்த சலுகையை வழங்குவதன் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் CO2 உமிழ்வை ஒவ்வொரு ஆண்டும் குறைக்க முடியும் என அம்மாநில அரசு நம்புகின்றது. இதனால், மாநிலத்தின் ஒட்டுமொத்த மாசு பிரச்னையில் 10 சதவீதம் பிரச்னையைக் குறைக்க முடியும் எனவும் அது நம்புகிறது.

மின்சார பைக்-ஸ்கூட்டர் வாங்குவோர்க்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது கோவா அரசு... என்ன சலுகைனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

மின் வாகன ஊக்குவிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியிலும் கோவா ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் பணியை கோவா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Goa Govt Announces Multiple Incentives For Electric Scooetrs And Bikes. Read In Tamil.
Story first published: Friday, February 12, 2021, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X