கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ரூ.99 ஆயிரம் என்ற விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் பைக்கில் 800கிமீ தொலைவை வெறும் ரூ.80 செலவில் பயணம் செய்ய முடியுமாம்.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

ஹைதராபாத்தை சேர்ந்த கிராவ்டன் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான பாகங்களை முழுக்க முழுக்க தனது சொந்த ஐடியாவில் இந்தியாவில் கிடைக்கும் மூலக்கூறுகளின் மூலம் வடிவமைத்து, பொருத்தியுள்ளது.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

நகர்புற மற்றும் கிராமபுற பகுதிகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் சுறுசுறுப்பான மற்றும் பாதுகாப்பான செயல்பாட்டிற்காக வலுவான மற்றும் விலா எலும்பு சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பைக்கில் இருந்து பேட்டரி திருடு போகுவதற்கோ அல்லது விபத்துகளின் போது சேதமடைவதற்கோ வாய்ப்புகள் குறைவு.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

கிராவ்டன் குவாண்டாவில் பொருத்தப்பட்டுள்ள 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு சிங்கிள்-முழு சார்ஜில் 150கிமீ வரையில் பைக்கை இயக்கி செல்லக்கூடியதாக உள்ளது. மேலும் இதன் சேசிஸால் இரு பேட்டரிகளை வழங்கும் அளவிற்கு இட வசதி தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த வகையில் பார்த்தோமேயானால், கிராவ்டன் குவாண்டாவின் ரேஞ்ச் 320கிமீ ஆகும். சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குவாண்டாவை கருப்பு நிறத்தில் சில காலத்திற்கு மட்டுமே பெற முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. கிராவ்டனின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் எவர் ஒருவரும் இந்த இவி-யை முன்பதிவு செய்ய முடியும். இதன் 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், இயந்திர இழப்பை தவிர்க்கும் வகையில், அதேநேரம் அதிக எரிபொருள் திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

கிராவ்டன் குவாண்டாவின் டாப் ஸ்பீடு மணிக்கு 70கிமீ ஆகும். 17 இன்ச்சில் சற்று சிறியதாக சக்கரங்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் ஈர்ப்பு விசை மையம் தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கிராவ்டனின் இடமாற்று சுற்றுச்சூழல் அமைப்பும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

இதன் மூலம் அருகில் உள்ள கிராவ்டனின் பேட்டரி சார்ஜிங் நிலையத்தையும், கூடுதல் பேட்டரியை ஆர்டர் செய்யவும் முடியும். விரைவு சார்ஜிங் வசதியில் இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்ப 90 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! ரூ.99 ஆயிரத்தில் விற்பனைக்கு அறிமுகம்

இதற்கு ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய் என வசூலிக்கப்பட உள்ளது. அதேநேரம் இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்ய வழக்கமான சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆனால் இதில் 3 மணிநேரங்கள் ஆகுமாம். குவாண்டாவின் பேட்டரிக்கு ஐந்து வருட உத்தரவாதத்தை கிராவ்டன் நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles

English summary
Gravton, a Hyderabad-based startup EV brand, has launched its first all-new revolutionary electric bike “Quanta”. While the two-wheeler segment is experiencing a pivotal moment in the recent years and slew of manufacturers entered the EV segment, Gravton derived the EV vision back in 2016 and is poised to make a significant development with the ‘Made for India’ purpose-driven (designed) vehicle ‘Quanta’.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X