ஆட்டோ இவி மார்ட் பெங்களூரில் திறப்பு! பல்வேறு பிராண்டு மின் வாகனங்களை ஒரே இடத்தில் பார்த்து வாங்க வாய்ப்பு!

மல்டி பிராண்ட் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனைச் செய்யும் வகையில் ஆட்டோ இவி மார்ட் (AutoEVMart) எனும் புதிய விற்பனையகத்தை கிரீவ்ஸ் காட்டன் (Greaves Cotton) நிறுவனம் திறந்திருக்கின்றது. இந்த விற்பனையகத்தின் சிறப்புகள் மற்றும் என்ன மாதிரியான இ-வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன என்பது பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

உலகின் மிக வேகமாக புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நகரத்தில் உள்ள பெரும்பாலானோர் மின் வாகனங்களை தங்களது தினசரி போக்குவரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

எனவேதான் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி ஆரம்ப நிலை வாகன உற்பத்தியாளர்கள் வரை தங்களின் புதுமுக மின் வாகன தயாரிப்புகளை இந்த நகரத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து அறிமுகம் செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் அதன் புதிய மின் வாகன விற்பனையகத்தை பெங்களூருவில் திறந்து வைத்திருக்கின்றது. எச்ஆர்பிஆர் லே-அவுட், 1 பிளாக், கல்யாண் நகர் என்ற பகுதியிலேயே முதல் பன்முக இவி பிராண்டுகளை விற்பனைச் செய்யும் ஆட்டோ இவி மார்ட் திறக்கப்பட்டிருக்கின்றது.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

இந்த மையம் பிரத்யேகமாக மின் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்வதற்காக திறக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், பன்முக பிராண்டுகளின் மின் வாகன தயாரிப்புகளை ஒரே இடத்தில் விற்பனைக்கு வழங்கும் பொருட்டு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார இருசக்கர வாகனங்கள் (இ-மோட்டார்சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

இதற்காக சுமார் 8,000 சதுர அடியில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையாகும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மையம் 'ஆட்டோ இவி மார்ட்' (AutoEVMart) எனும் பெயரில் இயங்கும். இங்கு ஆம்பியர் (Ampere), ஆட்டோலைன் (Autoline), பாலன் இஞ்ஜினியரிங் (Balan Engineering), கிரேயான் மோட்டார்ஸ் (Crayon Motors), டீடெல் (Detel), ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro), கோ ஜீரோ (Go Zero), கைனெடிக் (Kinetic), எம்எல்ஆர் (MLR), ஒமெகா செய்கீ மொபிலிட்டி (Omega Seiki Mobility), ரோவீட் (Roweet) மற்றும் வோல்ட்ரான் (Voltron) உள்ளிட்ட நிறுவனங்களின் மின் வாகன தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

இதுபோன்ற பன்முக தேர்வுகளை ஒற்றை இடத்திலேயே வழங்குவதன் வாயிலாக பன்முக வாடிக்கயாளர்களைப் பெற முடியும் என கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் நம்புகின்றது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வழங்கும் வகையில் விற்பனையகத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து பணியாளர்களும் கை தேர்ந்தவர்களாக தயார் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொரு வாகனம் பற்றிய தகவல்களையும் மிக தெளிவாக புட்டு வைப்பார்கள் என ஷோரூம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆட்டோ இவி மார்ட் சாலையோர உதவி (roadside assistance), மின்சார வாகனங்களுக்கான உதிரி பாக விற்பனை, மற்றும் இன்னும் பல சேவைகளை மின் வாகனம் சார்ந்து வழங்க இருக்கின்றது.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

மேலே பார்த்த சேவைகளை மட்மில்லைங்க, மின் வாகனங்களை அழகுபடுத்தும் மற்ற பணிகளையும் ஆட்டோ இவி மார்ட் ஷோரூம் மேற்கொள்ள இருக்கின்றது. தொடர்ந்து, தனிப்பட்ட மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான மாடிஃபிகேஷன் வேலைகளும் இங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

ஆகையால், ஒரே இடத்தில் பன்முக வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரிகின்றது. ஆட்டோ இவி மார்ட் விற்பனையகத்தில் ரூ. 23,299 என்ற ஆரம்ப விலையில் இருந்து மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இது ஓர் ஆரம்ப நிலை இ-சைக்கிளின் விலை ஆகும். இங்கு இ-சைக்கிள் ரூ. 54,999 என்ற உச்ச விலை வரை விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

ஆட்டோ லைன், கோ ஜீரோ, ஹீரோ லெக்ட்ரா மற்றும் வோல்ட்ரான் ஆகிய நிறுவனங்களின் இ-சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கும். 25 கிமீ தொடங்கி 80 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கக் கூடிய இ-சைக்கிள்கள் தங்களிடத்தில் பயன்பாட்டில் இருப்பதாக ஆட்டோ இவி மார்ட் மார்ட் தெரிவித்திருக்கின்றது. இ-மிதிவண்டியைப் போலவே இ-ஸ்கூட்டர்களும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

கிரேயான் மோட்டார்ஸ், டீடெல், கைனடிக் மற்றும் ரோவீட் உள்ளிட்ட நிறுவனங்களின் இ-ஸ்கூட்டர்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 48 ஆயிரம் தொடங்கி ரூ. 1.38 லட்சம் வரையிலான விலை உள்ள இ-ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இங்கு ஒற்றை சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் வழங்கக் கூடிய ஆம்பியர் நிறுவனத்தின் மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வழங்கப்படும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

ஆன்டி தெஃப்ட் அலாரம், டிஜிட்டல் டேஷ்போர்டு, யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகளை ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் இ-ஸ்கூட்டர் தாங்கியிருக்கின்றது. இதன் விலை ரூ. 69 ஆயிரம் ஆகும். இத்துடன், மேலே கூறியதை போல் ஆட்டோ இவி மார்ட் மையத்தில் மின்சரா மூன்று சக்கர வாகனங்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

ரூ. 1.83 லட்சம் தொடங்கி ரூ. 8.17 லட்சம் வரை விலையுள்ள இ-மூன்று சக்கர வாகனங்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். வர்த்தகம் மற்றும் பயணிகள் பயன்பாட்டு வசதிக் கொண்டது என பன்முக தேர்வுகளில் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், ஒமெகா செய்கீ மொபிலிட்டி, ஆம்பியர் எலெக்ட்ரிக், பாலன் இன்ஜினியரிங் மற்றும் எம்எல்ஆர் இ-ரிக்ஷாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் ஆட்டோ இவி மார்ட் விற்பனையகத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

100 கிமீ முதல் 120 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடிய இ-ஆட்டோக்கள் இங்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் எது தேவையே தங்களின் வசதிக்கேற்ப வாடிக்கையாளர்கள் மின்சார ஆட்டோவை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பன்முக பிராண்டுகளை ஒரே இடத்தில் விற்பனைக்கு வழங்கும் விதமாக கிரீவ்ஸ் காட்டன் அதன் புதிய ஆட்டோ இவி மார்ட் விற்பனையகத்தை பெங்களூருவில் திறந்திருக்கின்றது. இது அந்நகரத்தில் இன்னும் பல மடங்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

AutoEVMart திறப்பு... தேடி அலைய வேண்டாம்! பன்முக பிராண்டுகளின் இ-வாகனங்கள் இந்த ஒற்றை இடத்திலேயே கிடைக்கும்!

இதுமாதிரியான மையத்தை மிக விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் திறக்க ஆட்டோ இவி மார்ட் நிர்வாகம் திட்டமிட்டிருக்கின்றது. இதன்படி, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற முக்கியமான நகரங்களில் மிக விரைவில் பன்முக பிராண்டுகளின் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்யும் ஆட்டோ இவி மார்ட் மையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Greaves open autoevmart a multi brand electric vehicle showroom in bengaluru
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X