இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

வளர்ந்துவரும் பசுமை போக்குவரத்துக்கு இணக்கமான எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஜிடி-ஃபோர்ஸ் 2021 இவி இந்தியா எக்ஸ்போவில் ஜிடி டிரைவ், ஜிடி ட்ரைவ் ப்ரோ மற்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் மாதிரி என மொத்தம் 3 இவி-களை காட்சிப்படுத்தி உள்ளது. இவற்றை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் 2021ஆம் ஆண்டிற்கான இவி இந்தியா எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல எதிர்கால கனவுகளுடன் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இந்த வகையில், மிகவும் ஸ்போர்டியான ஸ்டைல் மற்றும் சிறந்த தொழிற்நுட்பத்துடன் ஜிடி-ஃபோர்ஸ் உருவாக்கியுள்ள ஜிடி டிரைவ், ஜிடி டிரைவ் ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், ஒரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

ஜிடி டிரைவ்

இந்த இ-ஸ்கூட்டர் ஜிடி-ஃபோர்ஸ் நிறுவனத்தால் அதி வேகமான மாடல்கள் பிரிவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜிடி டிரைவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 150 கிமீ-கள் என தயாரிப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இ-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக முழு சார்ஜில் 150 கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியுமாம்.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

லித்தியம்-இரும்பு பேட்டரிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்கானமி, ஸ்டாண்டர்ட் & டர்போ என்கிற மூன்று விதமான டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முக்கிய சிறப்பம்சமாக க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

ஜிடி டிரைவ் ப்ரோ

பொதுவாக ஒரு வாகனத்தின் ப்ரோ வெர்சன் என்றால், சற்று பிரீமியம் தரத்திலான தயாரிப்பாகவோ அல்லது அதிக ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வாகனமாகவோ தான் இருக்கும். ஆனால் இங்கு, ஜிடி டிரைவ் ப்ரோ ஆனது குறைவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், இதன் அதிகப்பட்ச வேகம் 25kmph மட்டுமே ஆகும்.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

ஆதலால் இதனை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் தேவை இல்லை என்பதால், ஜிடி டிரைவ் ப்ரோ முக்கியமாக அருகில் உள்ள கடைகளுக்கோ அல்லது பகுதிகளுக்கோ செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரினை லீட் ஆசிட் அல்லது லித்தியம்-இரும்பு பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம். இவற்றை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 75கிமீ-களுக்கு இயங்கலாம்.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

இவற்றுடன் ஜிடி-ஃபோர்ஸ் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாதிரியையும் 2021 இவி இந்தியா எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளோம் அல்லவா. கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்துள்ள இந்த எலக்ட்ரிக் பைக் மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் அடுத்த 2022ஆம் காலாண்டர் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

100க்கும் அதிகமான டீலர்ஷிப்களுடன் ஜிடி-ஃபோர்ஸ் அதன் விநியோக நெட்வொர்க்கினை 80 நகரங்களுக்கு விரிவுப்படுத்தி உள்ளது. தற்சமயம் இந்த நிறுவனம் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வலிமையாக கால் பதித்துள்ளது. இன்னும் நமது தமிழகத்தில் களம்புகவில்லை. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையில் 150ஐ தாண்டிவிட வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு ஜிடி-ஃபோர்ஸின் குறிக்கோளாக உள்ளது.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

தற்சமயம் ஜிடி-ஃபோர்ஸ் பிராண்டில் இருந்து மொத்தம் 7 தயாரிப்பு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிய மூன்று தயாரிப்பு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து ஜிடி-ஃபோர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓ-வுமான முகேஷ் டனெஜா பேசுகையில், "இவி-கள் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது மற்றும் பயணங்களின் போது சவுகரியமாக இருக்காது என்கிற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது.

இவி இந்தியா எக்ஸ்போ 2021: ஜிடி-ஃபோர்ஸின் 3 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் அறிமுகம்!! எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில்...!

இதற்கு காரணம், அவர்கள் (ஆட்டோமொபைல் நிறுவனங்கள்) இன்னும் அத்தகைய வாகனங்களை தயாரிக்க முயற்சிக்கவில்லை. எங்களது தயாரிப்புகள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அதிகப்படியான வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் விநியோக மையங்களை விரிவுப்படுத்த எங்களது குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்" என்றார்.

Most Read Articles
English summary
Gt force unveiled new three electric two wheelers at ev india expo 2021 details
Story first published: Monday, December 27, 2021, 22:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X