ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பான் அமெரிக்கா 1250 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இப்பைக் பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பான்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் அமெரிக்கா 1250 எனும் இருசக்கர வாகனத்தையே நிறுவனம் இந்தியாவில் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 16,90,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த உச்சபட்ச விலையிலேயே பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உயர்நிலை மாடல் ரூ. 19,99,000 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

மேற்கூறப்பட்டதும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. பான் அமெரிக்கா 1250 ஓர் அட்வென்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிளாகும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ப பல்வேறு சிறப்பு வசதிகளை ஹார்லி டேவிட்சன் இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

இதேபோன்று இப்பைக்கில் தொழில்நுட்ப வசதிகளும் ஏராளமாக உள்ளன. ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி தொடுதிரை, யுஎஸ்பி சி டைப்பிலான சார்ஜிங் பாயிண்ட் மற்றும் எல்இடி மின் விளக்குகளால் பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

இதுதவிர, எலெக்ட்ரானிக்கல்லி அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், சென்டர் ஸ்டாண்ட், ஹீடட் க்ரிப், ஸ்டியரிங் டேம்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஸ்பெஷல் தொழில்நுட்பங்களை பான் அமெரிக்கா 1250 பைக் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இப்பைக்கின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

அதாவது, பிரபல எஸ்யூவி கார்களின் விலையைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கின்றது. இப்பைக்கில் 1252 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎச்பி மற்றும் 127 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சூப்பர் பைக்குகளான பிஎம்டபிள்யூ ஆர் 1250ஜிஎஸ் மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!!

இத்தகைய அதிக திறன் வாய்ந்த பைக்கையே ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ஆடம்பர இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இப்பைக் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தநிலையில் தற்போது நாட்டில் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Harley-Davidson Launches Pan America 1250 Bike In India At Rs 16.90 Lakh. Read In Tamil.
Story first published: Wednesday, April 28, 2021, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X