இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் முதல் அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்கா 1250-இன் சில குறிப்பிட்ட மாதிரிகளை திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

எவ்வளவு பார்த்து பார்த்து உருவாக்கினாலும், சில சமயங்களில் வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்க இயலாது. ஏனெனில் ஒரு பைக்கோ அல்லது காரோ தொழிற்சாலையில் பலரது கைகளின் மூலமாக உருவாக்கப்படுகிறது. தவறுகளை அடையாளம் காணவும், சரி செய்யவும் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்கள் இருந்தாலும், தவறான பாகங்கள் இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது சில நேரங்களில் பின்னரே தெரிய வருகிறது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

அத்தகைய நேரங்களில் எந்தவொரு சமரசமுமின்றி விற்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, அவற்றை மீண்டும் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அழைத்து சரிசெய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முயற்சிப்பது வழக்கம். இந்த வகையில் தான் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் அதன் விற்கப்பட்ட பான் அமெரிக்கா பைக்குகளை திரும்ப அழைத்துள்ளது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இருக்கை அடித்தள அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக, ஹார்லி-டேவிட்சனின் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் 2021 மார்ச் 8ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 13ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட பான் அமெரிக்கா 1250 பைக்குகள் உட்படுகின்றன. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 2,689 பான் அமெரிக்கா 1250 பைக்குகளை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இவை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் உள்ள பான் அமெரிக்கா 1250 பைக் உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இந்த திரும்ப அழைத்தல் குறித்து அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை தொடர்பு கொள்வது நல்லது. பின் இருக்கை அமைப்பானது மேற்க்கூறப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விலைமிக்க அட்வென்ச்சர் பைக்கின் மாதிரிகளில் சரிவர பொருத்தப்படவில்லை.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இது தற்போதைக்கு நல்லப்படியாக தென்பட்டாலும், எதிர்காலத்தில் பழுதாக வாய்ப்புண்டு. அல்லது மார்ச் 8இல் இருந்து அக்.13 வரையில் தயாரிக்கப்பட்ட ஒரு சில பான் அமெரிக்கா 1250 பைக்குகளில் இப்போதே பின் இருக்கை அமைப்பில் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்திருக்கலாம். இதனால் இந்த பழுது இலவசமாக (எதிர்பார்க்கப்படுகிறது) சரிசெய்து கொடுக்க சம்பந்தப்பட்ட பான் அமெரிக்கா 1250 பைக் உரிமையாளர்களை ஹார்லி-டேவிட்சனின் டீலர்கள் தொடர்பு கொள்ளவுள்ளனர்.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் நேரடி வணிகத்தை ஹார்லி-டேவிட்சன் நிறுத்தி கொண்டதை அடுத்து, இந்த அமெரிக்க பிராண்டின் பைக்குகள் ஹீரோ மோட்டோகார்பின் டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆதலால் இந்த திரும்ப அழைத்தல் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் டீலர்களிடம் இருந்தே அழைப்புகள் வரும்.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

ஹீரோ நிறுவனத்தின் டீலர்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களை தொடர்பு கொண்டு இந்த பின் இருக்கை பழுதை சரிச்செய்து கொள்வதற்கான தேதியையும், நேரத்தையும் வழங்கவுள்ளனர். இந்திய சந்தையில் புதிய பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர் பைக் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் டிரையம்ப் டைகர் 1200 உள்ளிட்ட சூப்பர் அட்வென்ச்சர் பைக்குகளின் விற்பனை போட்டியினை எதிர்கொண்டுவரும் பான் அமெரிக்கா 1250 பைக்கில் 1,252சிசி லிக்யுடு-கூல்டு வி-இரட்டை என்ஜினை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 9,000 ஆர்பிஎம்-இல் 150 பிஎச்பி மற்றும் 6,750 ஆர்பிஎம்-இல் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

விரிவான பவர்பேண்ட் மற்றும் குறைந்த ஆர்பிஎம்-இல் அதிக டார்க் திறனை பெறுவதற்காக இந்த என்ஜின், கவுண்டர்-பேலன்சிங் வெவ்வேறான வால்வு நேரத்தினை பெறுவதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் பான் அமெரிக்கா 1250 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.90 லட்சமாக உள்ளது. மேலும், ஸ்பெஷல் வேரியண்ட்டிலும் இந்த அட்வென்ச்சர் பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.99 லட்சமாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் உலகளாவிய மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் சில தடுமாற்றங்களை கண்டது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் அதனை சரிக்கட்ட பல நடவடிக்கைகளில் இறங்கியது.

இவ்வளவு விலைமிக்க பைக்கில் இதை கூடவா கவனிக்கவில்லை? பான் அமெரிக்கா பைக்குகளில் பிரச்சனை, திரும்ப அழைக்கும் H-D

இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தனது தொழிற்சாலையை மூடியது மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்தது எல்லாம். இத்தகைய நடவடிக்கைகள் கை கொடுத்ததா என்றால், ஒரு சில நாடுகளில் கை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தாயக அமெரிக்க சந்தையில் ஹார்லி-டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்கா 1250-க்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Most Read Articles

English summary
Harley-Davidson pan america 1250 recall 2689 units.
Story first published: Thursday, December 9, 2021, 23:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X