இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

பிரபல மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் அதன் முற்றிலும் புதிய பான் அமெரிக்கா 1250 மோட்டார்சைக்கிள்களை சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்தியாவில் பான் அமெரிக்கா மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

இந்த நிலையில் பான் அமெரிக்கா 1250 பைக்குகள் இந்தியாவில் சில டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன. அதில் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

சண்டிகரில் உள்ள ஹிமாலயன் ஹார்லி டேவிட்சன் என்ற ஷோரூமிற்கு வருகை தந்துள்ள இந்த பான் அமெரிக்கா 1250 பைக்கை இந்த வீடியோவில் அன்பாக்ஸிங் செய்வதை பார்க்கலாம். ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் ரக பைக்காக பான் அமெரிக்கா விளங்குகிறது.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்பதால், பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, பிளவுப்பட்ட வடிவில் இருக்கை, மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், துணை டிசைன் பாகங்கள் மற்றும் 21 லிட்டரில் பெரியதாக பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவற்றை பான் அமெரிக்கா மாடல் பெற்றுள்ளது.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

ஆனால் தற்போது சண்டிகர் ஷோரூமிற்கு வருகை தந்துள்ள பான் அமெரிக்கா 1250 பைக்கில் முன்பக்க கண்ணாடி இல்லை. ஏற்றுமதி, இறக்குமதிக்காக பொருத்தப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஷோரூம் டீலர்கள் அதனை பொருத்தியே வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்வர்.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

அலாய் சக்கரங்கள் இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரம் ட்யுப்லெஸ் டயர் உடன் க்ராஸ் ஸ்போக் சக்கரங்களும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக வழங்கப்பட உள்ளன. பைக்கை சுற்றிலும் பொருத்தப்படுகின்ற விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்திலானவை.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

இவற்றுடன் ப்ளூடூத் வசதி கொண்ட 6.8 இன்ச் வண்ண டிஎஃப்டி தொடுத்திரை, ஹீட்டட் ஹேண்டில்பார் க்ரிப்கள், ஸ்டேரிங் டேம்பர், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு போன்றவையும் பான் அமெரிக்கா 1250 பைக்கில் வழங்கப்பட உள்ளன.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

இவை போதாது என்போர்க்காக, சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் ரைடர் இருக்கை அமைப்பும் கூடுதல் தேர்வாக இந்த பைக்கில் கொடுக்கப்பட உள்ளது. இந்த அட்வென்ச்சர் பைக்கின் முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

புதிய பான் அமெரிக்காவில் 1,252சிசி, ரெவால்யூஷன் மேக்ஸ் வி-இரட்டை என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 150 எச்பி மற்றும் 6,750 ஆர்பிஎம்-இல் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் அமைப்பில் நீண்ட ஸ்ட்ரோக்கிற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள சிறிய ஸ்ட்ரோக்கினால் இவ்வாறு அதிக ஆர்பிஎம் அளவுகளை பெறுவது சாத்தியமாகிறது.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

இத்துடன் பான் அமெரிக்கா மாடலின் என்ஜின் வெவ்வேறான வால்வு நேரம், இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் மற்றும் 4 வால்வு சிலிண்டர் ஹெட் உள்ளிட்டவற்றுடன் லிக்யூடு கூலிங் அமைப்பை பெற்றுள்ளது. பான் அமெரிக்கா 1250 பைக்கின் எடை 242 கிலோவாக உள்ளது. அதுவே இந்த அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பெஷல் வேரியண்ட்டின் எடை 254 கிலோ ஆகும்.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

சஸ்பென்ஷனிற்கு முழு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷோவா யுஎஸ்டி ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் கவனிக்க ரேடியல் மோனோ-ப்ளாக் 4 பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ இரட்டை ப்ரேக்கும், பின் சக்கரத்தில் 280மிமீ சிங்கிள் ப்ரேக்கும் வழங்கப்படுகின்றன.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

ஸ்டாண்டர்ட் & ஸ்பெஷல் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.90 லட்சம் மற்றும் ரூ.20.26 லட்சமாக இந்திய சந்தையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய மண்ணை வந்தடைந்தது ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா!! அமெரிக்க நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக்

இந்தியாவில் இருந்த தொழிற்சாலையை மூடி கொள்வதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் கடந்த ஆண்டில் அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தது.

Most Read Articles
English summary
Harley davidson pan america 1250 unboxing by chandigarh dealer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X