Just In
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிக பாதுகாப்பான பைக்... புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் பற்றி அறிந்து கொள்ள 5 முக்கிய தகவல்கள்...
அண்மையில் அறிமுகமான அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட பஜாஜ் பிளாட்டினா 110 பைக் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பஜாஜ் நிறுவனம் மிக மிக சமீபத்தில் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது. இதில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக்கிங் பிரேக் தொழில்நுட்ப வசதியைச் சேர்த்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் அதிக வழு வழுப்பான சாலையில்கூட சிறப்பான பிரேக்கிங்கை வழங்க உதவியாக இருக்கும்.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், மழைக் காலங்களில் ஏற்படும் வழு வழுப்பான சாலையை சமாளிக்க இந்த பிரேக்கிங் தொழில்நுட்பம் அதிக உதவியாக இருக்கும். எனவேதான் இந்த வசதியைக் கொண்டு களமிறங்கியிருக்கும் பிளாட்டினாவின் வருகை பலரின் கவனத்தை தன் வசம் திருப்பியிருக்கின்றது. இப்பைக் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஏபிஎஸ்:
பிளாட்டினா பைக்கில் இந்த வசதியை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை நிறுவனம் இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது. இத்துடன், 240 மிமீ டிஸ்க்கையும் பைக்கின் முன் பக்க வீலில் பஜாஜ் வழங்கியிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்து மிக சிறந்த திறன் கொண்ட பிரேக்கை வழங்கும். பின் பக்க வீலில் 110மிமீ அளவுள்ள ட்ரம் பிரேக் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்ஜின்:
இப்பைக்கில் 115 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினையே பஜாஜ் பயன்படுத்தியிருக்கின்றது. இது ஓர் ஏர் கூல்டு எஞ்ஜினாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 8.4 பிஎச்பியையும், 9.81 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இத்துடன், எச்-கியர் தொழில்நுட்பம் கொண்ட 5 ஸ்பீடு டிரான்மிஷனை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

சிறப்பம்சங்கள்:
ஏபிஎஸ் தவிர்த்து இப்பைக்கில் ஏபிஎஸ் எந்த பொஷிஷனில் இருக்கின்றது என்பதை விளக்கக் கூடிய வசதி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர மிக நீளமான இருக்கை, டிஆர்எல்களுடன் கூடிய ஹெட்லேம்ப், பகல்நேர பனி மின் விளக்கு, க்னக்கிள் குவார்ட், நைட்ராக்ஸ் ஸ்பிரிங்-ஆன்-ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர், அலாய் வீல் மற்றும் ட்யூப் லெஸ் டயர் என எக்கசக்க அம்சங்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

நிறம்:
பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் மூன்று விதமான நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். சார்கோல் கருப்பு, எரிமலை சிவப்பு, கடல் நீலம் ஆகியவை அவை ஆகும். இந்த நிறங்களில் புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக் கிடைக்கும்.

விலை:
பல்வேறு அம்சங்கள் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றதே, ஆகையால், இதன் விலையும் அதிகமாக இருக்குமோ என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். ஆனால், இப்பைக்கிற்கு மிக குறைந்த விலையை நிர்ணயித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கின்றது பஜாஜ்.

புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கிற்கு ரூ. 65,926 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இது வழக்கமான பிளாட்டினா எச்-கியர் மாடலைக் காட்டிலும் ரூ. 1,241 கூடுதல் விலையாகும். ரூ. 64,685 என்ற விலையிலேயே எச்-கியர் பிளாட்டினா விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த விலைகள் அனைத்து டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.