மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது! Avenis பற்றி முழுசா தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

புதுமுக ஸ்கூட்டர் சுசுகி அவெனிஸ் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பிற ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அப்படி என்ன அம்சங்களை இந்த ஸ்கூட்டர் கடுமையான போட்டியை வழங்கும் வகையில் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம், இந்திய இருசக்கர வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில், அதன் புதுமுக ஸ்கூட்டர் மாடலான சுசுகி அவெனிஸ் (Suzuki Avenis)-ஐ இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த ஸ்கூட்டரின் வருகை இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் சில ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு கூறுவதற்கு ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களே காரணமாக இருக்கின்றன. அப்படி என்ன மாதிரியான அம்சங்களை சுசுகி அவெனிஸ் பெற்றிருக்கின்றன? வாருங்கள் பார்க்கலாம்.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ஸ்போர்ட்டி தோற்றம்:

இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவெனிஸ் ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்டியான தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக பல புதிய யுக்திகளை நிறுவனம் கையாண்டிருக்கின்றது.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இதனடிப்படையில், முன்பக்கத்தில் கூர்மையான அப்ரோன் (apron) பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதிலேயே முழு எல்இடி தர ஹெட்லைட்டை பொருத்தியிருப்பது ஸ்கூட்டருக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஹேண்டில் பார் கவுல் (இதிலேயே பல்ப் இன்டிகேட்டர்களும் இடம் பெற்றிருக்கின்றன), ஃப்ளையிங் திரை என பல்வேறு சிறப்பு யுக்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இதுபோன்ற முன்பக்கத்தை ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காண்பித்ததைப் போலவே பக்கவாட்டு பகுதியிலும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. வெட்டுக்கள் மற்றும் கட்டுமஸ்தான உடல் பாகங்களின் வாயிலாக பக்கவாட்டு பகுதிக்கு ஸ்போர்ட்டி தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஸ்கூட்டரின் வால் பகுதியிலும் சில நேர்த்தியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்இடி மின் விளக்கு, தட்டையான எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

சிறப்பம்சங்கள்:

ஸ்போர்ட்டி தோற்றத்திற்கு அடுத்தபடியாக இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அதிக தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. ஆகையால், இந்த விஷயத்திலும் அதிக கவனத்துடன் சுசுகி நிறுவனம் செயல்பட்டிருக்கின்றன. ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இது பன்முக சிறப்பு வசதிகளை வழங்கும். செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை அறிய, ஓவர்ஸ்பீடு பற்றி எச்சரிக்கை வழங்குதல், திருப்பத்திற்கு திருப்பத்திற்கு நேவிகேஷன் பற்றிய தகவலை வழங்குவது என பன் நிலைகளில் இந்த திரை உதவும். இத்துடன், பயண தூரம், செல்போனின் சார்ஜ் அளவு ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இவற்றைத் தொடர்ந்து, எஞ்ஜினை நிறுத்த உதவும் 'கில்' ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் சைடு போட்டிருந்தால் எஞ்ஜினை நிறுத்தும் வசதி ஆகியவையும் அவெனிஸில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், அதற்கு கிழாக வல புறத்தில் ஒரு லிட்டர் அளவுள்ள கப்பி துளை, வெளிப்புற ப்யூவல் பில்லர், 21.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர் சீட் ஸ்டோரேஜ் ஆகியவையும் வவங்கப்பட்டிருக்கின்றன.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

எஞ்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சம்:

சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரில் பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 124.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 6,750 ஆர்பிஎம்மில் 8.7 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இதைத்தொடர்ந்து, சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஷாக் அப்சார்பரும், 12 இன்ச் அலாய் வீல் முன் பக்கத்திலும், 10 இன்ச் அலாய் வீல் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில், 90 பிரிவு ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடை 106 கிலோவாகும். இது, அக்செஸ் 125 ஸ்கூட்டரைக் காட்டிலும் 3 கிலோ அதிகம், பர்க்மேன் ஸ்ட்ரீட்டைக் காட்டிலும் 4 கிலோ குறைவாகும். 780 மிமீ நீளம்கொண்ட ஒற்றை துண்டு அமைப்பு இருக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் தொட்டி 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பர்க்மேன் ஸ்ட்ரீட்டைக் காட்டிலும் 0.3 லிட்டர் அதிக அளவு இதுவாகும்.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

பிரீமியம் தர அம்சங்கள்:

சுசுகி நிறுவனம் இதன் பேஸ் வேரியண்டிலேயே ஸ்மார்ட் போன் இணைப்பு வசதியை வழங்குகின்றது. இதன் விலை ரூ. 86,700 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இது ஓர் பிரீமியம் தர இருசக்கர வாகனமாக காட்சியளிக்கின்றது. இத்துடன், இதைவிட கூடுதல் பிரீமியம் தேர்வாக ரேஸ் எடிசன் வழங்கப்படுகின்றது.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

சுசுகியின் மோட்டோஜிபி டிசைன் தாத்பரியத்தை தழுவி இந்த பதிப்பு வழங்கப்படுகின்றது. இதன் விலை வழக்கமான மாடலைக் காட்டிலும் 300 ரூபாய் அதிகம் ஆகும். ஸ்பெஷல் தோற்றத்தில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது.

மத்த ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்க போகுது... Suzuki Avenis இந்த விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

போட்டியாளர்கள்:

சுசுகி அவெனிஸ் முக்கியமாக டிவிஎஸ் என்டார்க் 125 (TVS NTorq 125), ஹோண்டா கிரேஸியா 125 (Honda Grazia 125) மற்றும் யமஹா ரேஇசட்ஆர் 125 (Yamaha RayZR 125) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் இந்திய சந்தையில் நுழைந்திருக்கின்றது. அதேநேரத்தில் இதைவிட அதிக திறன் வெளிப்பாடு கொண்ட வாகனமாக டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி எடிசன் (TVS NTorq 125 Race XP) காட்சியளிக்கின்றது. இதன் விலையும் அவெனிஸ் ஸ்கூட்டரைக் காட்டிலும் ரூ. 1,675 குறைவானதாக இருக்கின்றது. டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி பன்முக டிரைவிங் மோட்களுடன் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Here is full details about suzuki avenis
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X