எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310? பைக் பற்றி அறிய வேண்டிய மிக முக்கியமான தகவல்களின் தொகுப்பு!

2021 TVS Apache RR 310 பைக்கில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம்.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

இந்திய இருசக்கர வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 2021 TVS Apache RR 310 (2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310) பைக் நேற்று (ஆகஸ்டு 30) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

அதேசமயம், இந்த புதுப்பித்தலை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் வழக்கமான புதுப்பிலாக அல்லாமல் சற்று மாறுபட்ட புதுப்பித்தலை டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இதனால், புதிய 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 கூடுதல் கவர்ச்சியான ரேஸ் பைக்காக மாறியிருக்கின்றது. இதற்காக புதிய சஸ்பென்ஷன், ரேஸ் கிட் மற்றும் ரேஸ் பிரதி என்பதை வெளிக்காட்டுகின்ற வகையிலான கிராஃபிக்ஸ்கள் உள்ளிட்டவை இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

ஆகையால், இதற்கு முன்னர் விற்பனையில் இருந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கைக் காட்டிலும் 2021 மாடல் வேற லெவலில் காட்சியளிக்கின்றது. இப்பைக்கை பிரத்யேக Built To Order (BTO) பிளாட்பாரத்தில் வைத்து டிவிஎஸ் கட்டமைத்து வருகின்றது. இதுபோன்ற முக்கியமான மற்றும் சுவராஷ்யமான தகவல்களையே விரிவாக இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

2021 TVS Apache RR 310 செயல்திறன் கருவிகள்:

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 இரு விதமான Performance Kits இல் விற்பனைக்கு கிடைக்கிறது. Dynamic (டைனமிக்) மற்றும் (Race) என இரு விதமான கிட் தேர்விலேயே பைக் கிடைக்கும். ஸ்ட்ரீட் லீகல் மற்றும் டிராக் ஸ்பெக் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இத்தகைய தேர்வை டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

இதில், டைனமிக் கிட் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஷன் வசதியுன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த சஸ்பென்ஷன் பைக்கின் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேவேலையில் முன் பக்க வீலில் 20 படிநிலை கொண்ட கம்பரெஸ்ஸன் மற்றும் ரீ பவுண்ட் வசதிக் கொண்ட கேஒய்பி ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனை 10 படி நிலைகளில் ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

இவையிரண்டும் மிக நேர்த்தியான சஸ்பென்ஷன்களாக காட்சியளிக்கின்றன. அதாவது, ரேஸ் ட்ராக்குகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஓர் சஸ்பென்ஷன்களாக இவை உள்ளன. இத்துடன், டைனமிக் கிட்-ஐ பிராஸ் கோடட் செயினை வழங்கியிருக்கின்றது. இது அவ்வளவு துளிதில் துரு பிடிக்காத செயின் ஆகும். ஆகையால், அதிக பயன்பாடு மற்றும் ஆயுட்காலத்தை இதில் எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

மேலும், புதிய வேவ் கீ வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைக் கொண்டு மிக எளிதில், அதாவது, கைகளைக் கொண்டே செயினை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ரேஸ் கிட்; இந்த தேர்வில் பன்முக ரைடிங் பொசிஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் க்ளிப்-ஆன்-ஹேண்டில் பார் எட்டு டிகிரி தாழ்வாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக நேர்த்தியான ரைடிங் அனுபவத்தை வழங்க உதவும்.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

புதிய Exhaust Muffler (எக்சாஸ்ட் மஃப்ளர்)

இருசக்கர வாகன தயாரிப்பாளர் 2021 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் புகை வெளியேற்றும் குழாயின் வடிவமைப்பிலும் கை வைத்திருக்கின்றது. புதிதாக உட்பக்க பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரேஸ் பைக் போன்ற பிம்பத்திற்காகவும், சிறந்த வடிகட்டும் திறனை வழங்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. புதிய மஃப்ளர் சேர்ப்பு மோட்டார்சைக்கிளில் நிலையான மேம்படுத்தலாக வழங்கப்பட்டிருக்கின்றது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

புதிய Instrument Cluster (இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்)

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் 5.5 இன்சிலான டிஃப்டி திரையை அப்கிரேட் செய்திருக்கின்றது. ஆகையால் இதில் புதிதாக பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. டிஜி லாக்கர் (ஆர்சி புத்தகம் மற்றும் வண்டியி பிற முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்க உதவும்), ஸ்மார்ட்-எக்ஸொன்னெக்ட் ப்ளூடூத் இணைப்பு, டே ட்ரிப் மீட்டர் மற்றும் ஒவர் ஸ்பீடு இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

உருவ மாற்றம்

அப்டேட்டின் வாயிலாக சில கணிசமான மாற்றங்களை 2021 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் டிவிஎஸ் மேற்கொண்டிருக்கின்றது. குறிப்பாக ரேஸ் வாகனத்தைப் போல் காட்டும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காக புதிய சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

இத்துடன், கூடுதல் சிறப்பு தேர்வாக வாடிக்கையாளர்கள் விரும் பிரத்யேக எண்களை வாகனத்தில் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீலில் சிறப்பு நிற தேர்வாக சிவப்பு வண்ணம் வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. வழக்கமாக கருப்பு நிறத்திலேயே இந்த அலாய் வீல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

எஞ்ஜின்

இப்பைக்கில் 313 சிசி எஞ்ஜின் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 34 பிஎச்பியை 9,700 ஆர்பிஎம்மிலும், 27.3 என்எம் டார்க்கை 7,700 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இயங்கும். இத்துடன், ரேஸ் ட்யூன்ட் ஸ்லிப்பர் க்ளட்சும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், Urban, Track, Sport and Rain ஆகிய ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறந்த இயக்கத்திற்காக மிஷ்லின் டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

விலை

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு விலையாக ரூ. 2.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அடிப்படை அப்டேட்டுகளைக் கொண்டிருக்கும் தேர்வின் விலை இதுவாகும். இதன் டைனமிக் கிட் கூடுதலாக ரூ. 12 விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, கிடைக்கும் ரேஸ் கிட்டி ரூ. 5 ஆயிரம் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன் வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வாக வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்களையும் கூடுதல் கட்டணத்தின் கீழே டிவிஎஸ் வழங்க இருக்கின்றது.

எதிர்பார்த்தபடி இருக்கிறதா 2021 TVS Apache RR 310?.. அறிந்து மிக முக்கிய தகவல்களின் தொகுப்பு! இது ரொம்ப ஸ்பெஷலான தயாரிப்பு!

இத்தகைய சிறப்பு வாய்ந்த கிட் தேர்வுகளை Built To Order திட்டத்தின்கீழ் மாதம் 100 யூனிட் என விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதேசமயம், செப்டம்பர் மாதம் 150 யூனிட்டுகளுக்கான ஆர்டர்களை பெற இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Here is full details all we need to know about 2021 tvs apache rr 310
Story first published: Tuesday, August 31, 2021, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X