ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஒரு லட்ச ரூபா விலையில் மிக அதிக சிறப்பம்சங்களுடன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இருசக்கர வாகனங்களின் பட்டியலைக் காண பதிவிற்குள் போகலாம்.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஒரு லட்சம் ரூபாய் விலையிலேயே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மோட்டார்சைக்கிள்கள் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. எல்இடி மின் விளக்கு அலங்கரிப்பு தொடங்கி ப்ளூடூத் இணைப்பு வசதி என பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஆரம்ப நிலை இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஒட்டுமொத்தமாக ஐந்து மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் இந்த பதிவில் வழங்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் ப்யூச்சர் லோடட் எனப்படும் மிக அதிக சிறப்பு வசதிகளை மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கக் கூடியவை ஆகும். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour Xtec)

பெயரிலேயே 'டெக்' என கூறி தான் ஓர் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனம் என்பதனை ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் நமக்கு உணர்த்துகின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் உச்சநிலை வேரியண்டே சென்னை எக்ஸ்-ஷோரும் விலையில் ரூ. 88,050க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 83,400 ஆகும். இத்தகைய குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த பைக் வழங்குகின்றது.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழி குறித்த தகவலை வழங்கும் நேவிகேஷன் தொழில்நுட்பம் (கூகுள் மேப்), டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி மின் விளக்கு, யுஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட் மற்றும் ஆட்டோ செயில் ஸ்டாப்/ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதனால்தான் இந்த பைக் அது விற்பனைக்குக் கிடைக்கும் செக்மெண்டில் தலைவனாக மாறியிருக்கின்றது.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125)

ஆரம்ப நிலை இருசக்கர வாகனமாக இது இருந்தாலும் மிகவும் கவர்ச்சிகரமான இருசக்கர வாகனத்தைப் போன்ற தோற்றத்தையும், அம்சங்களையும் பெற்றிருக்கின்றது. டிவிஎஸ் ரைடரும் இந்திய இருசக்கர வாகன சந்தையில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

இதன் ட்ரம் வேரியண்டின் விலை ரூ. 83,386 ஆகும். இதன் டிஸ்க் வேரியண்டிற்கு ரூ. 90,157 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்முக நிறங்கள் வசதிக் கொண்ட எல்சிடி திரை, மிகவும் ஸ்டைலான எல்இடி ஹெட்லைட் - வால் பகுதி மின் விளக்கு, மிகவும் சைலாண்டான வழியில் ஸ்டார்ட்டாகும் தொழில்நுட்பம், பன்மு ரைடிங் மோட்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)

மேலே பார்த்த இரு பைக்குகளைப் போலவே ஹோண்டா எஸ்பி 125 பைக்கும் இந்தியாவில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் ஆரம்ப நிலை தேர்வான ட்ரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 81,823ம், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 86,118 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனம் எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஏசிஜி சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், இஎஸ்பி தொழில்நுட்பம் (எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்), 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் பின் பக்க சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

ஹீரோ கிளாமர் (Hero Glamour)

ஹீரோ நிறுவனத்தின் புகழ்மிக்க இருசக்கர வாகன மாடல்களில் கிளாமர் மோட்டார்சைக்கிளும் ஒன்று. இந்த பைக் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. 100 மில்லியன் எடிசனில் ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு தேர்விலும், செல்ஃப் ஸ்டார்ட் ட்ரம் பிரேக் அலாய் வீல், செல்ஃப் ஸ்டார்ட் டிஸ்க் பிரேக் அலாய் வீல், பிளேஸ் ட்ரம் மற்றும் பிளேஸ் டிஸ்க் ஆகிய தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 78,500ஆக இருக்கின்றது. உச்சபட்சமாக இந்த பைக் ரூ. 84,300 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் ஐ3எஸ் ஸ்டாப்/ஸ்டார்ட் சிஸ்டம், ஆட்டோசெயில் எனப்படும் ஆன்டி ஸ்டால் அம்சம் மற்றும் நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் முதல் எல்இடி மின் விளக்கு வரை... 1 லட்ச ரூபா விலையில் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் இந்திய பைக்குகள்!

பஜாஜ் பல்சர் 150 நியான் (Bajaj Pulsar 150 Neon)

நாம் பார்க்கும் இந்த பட்டியலில் மிக அதிக விலைக் கொண்ட பைக் இதுவாகும். இந்த பைக் இந்திய சந்தையில் ரூ. 1,02,138 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை இதை விட குறைவு. புது டெல்லியில் இந்த பைக் ரூ. 99,418 விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த பைக்கிலும் மேலே பார்த்த பைக்குகளைப் போல் சிறப்பு அம்சங்களின் அதிகம் ஆகும்.

Most Read Articles

English summary
Here is list of feature loaded bike with in rs 1 lakh
Story first published: Tuesday, December 7, 2021, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X