உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swiftஇருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! அவை என்ன

இந்தியர்களின் பிரியமான ஹேட்ச்பேக் ரக காராக காட்சியளிக்கும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இல் இடம் பெறாத முக்கிய அம்சங்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அவை என்ன என்பது பற்றிய முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

இந்தியர்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) இருக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் இது இருக்கின்றது. தனக்கு கிடைத்து வரும் மிக அமோகமான வரவேற்பினால் ஹேட்ச்பேக் பிரிவின் தலைவனாக இந்த கார் மாறியிருக்கின்றது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

15 ஆண்டுகளாக இந்த இடத்தை ஸ்விஃப்ட் தக்க வைத்து வருகின்றது. ஆனால், இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்று வரும் ஸ்விஃப்ட் காரில் குறிப்பிடத்தகுந்த மற்றும் மிகவும் முக்கியமான அம்சங்கள் சில இடம் பெறவில்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரில் இடம் பெற தவறிய ஏழு முக்கிய அம்சங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் (Mild Hybrid Technology):

மாருதி சுசுகி நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்கி வருகின்றது. இது இரட்டை பேட்டரி அமைப்பாகும். அதாவது, நீண்ட நேரம் வாகனம் ஓரிடத்தில் நின்றுக் கொண்டிருக்கும்போது எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் இந்த பேட்டரிகள் செயல்படும். இந்த வசதியை பலினோ, சியாஸ், எஸ்-கிராஸ் ஆகிய கார் மாடல்களில் வழங்கி வருகின்றது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

ஆனால், தனது அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கில் இந்த வசதியை நிறுவனம் வழங்கவில்லை. இது ஸ்விஃப்ட் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் கவலைக்குரிய விஷயமாக இருக்கின்றது. இருப்பினும் ஸ்விஃப்ட் காரின் விற்பனை சற்றும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

சிவிடி ஆட்டோமேட்டிக் (CVT Automatic):

மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை போலவே சிவிடி வசதியும் ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை. ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மட்டுமே ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு வருகின்றது. இது வாகனத்தை சிறந்த ஒன்றாக மாற்றினாலும், சிவிடி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பலினோ உள்ளிட்ட கார்களில் சிவிடி தேர்வு வழங்கப்படுகின்றது. 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் எஞ்ஜினில் சிவிடி வழங்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் (Digital Instrument Cluster):

மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விஃப்ட் கார் மாடலில் எம்ஐடி ரக திரையை வழங்கி வருகின்றது. இது ஓர் கிளாசிக் ரக திரையாக இருந்தாலும், தற்போது சந்தையில் புதிய தொழில்நுட்பங்களே நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கு டிஜிட்டல் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், இதனை ஸ்விஃப்ட் காரில் நிறுவனம் வழங்கவில்லை.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

தானியங்கி ஹெட்லேம்ப் (Automatic Headlamps) மற்றும் மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் (Rain Sensing Wipers):

போட்டி அதிகரித்துக் காணப்படுவதன் காரணத்தினால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாடர்ன் ரக தொழில்நுட்பங்களை தங்களின் புதுமுக வாகனங்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், புதிதாக விற்பனைக்குக் களமிறங்கும் வாகனங்களில் தானியங்கி ஹெட்லேம்ப் மற்றும் மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

ஆனால், இந்த அம்சம் ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை. இவ்விரண்ட அம்சங்களும் இந்தியர்களின் பிரியமான அம்சங்களில் ஒன்றாக மாறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், தற்போது வரை நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த அம்சத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

1.3 லிட்டர் டீசல் பர்னர் எஞ்ஜின் (1.3 Litre Diesel Burner):

புதிய பிஎஸ்6 தர மாசு உமிழ்வு விதி இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பின்னர் பல முன்னணி நிறுவனங்கள் சிறிய ரக டீசல் எஞ்ஜின் கொண்ட தேர்வுகளை விற்பனையில் இருந்து வெளியேற்றின. அந்தவகையில், மாருதி நிறுவனமும் 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின் கொண்ட கார் மாடல் சிலவற்றை விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இத்தகைய எஞ்ஜின் கொண்ட ஸ்விஃப்ட் கார் விற்பனைக்குக் கிடைக்காதது அதன் பிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை வழங்கி வருகின்றது.

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காராக Swift இருக்கலாம்! ஆனா இந்தியர்களின் பிரியமான அம்சங்கள் சில இதில் இல்லை! என்ன அவை?

பின் பக்க பயணிகளுக்கான முக்கியத்துவங்கள் குறைவு:

புதிய கார் மாடல்களில் முன் பக்க பயணிகள் மட்டுமின்றி பின் பக்க பயணிகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், பின் பக்க பயணிகளுக்கும் ஏசி துவாரம், செல்போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் கைகளுக்கு ஓய்வளிக்கும் ஆர்ம்-ரெஸ்ட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அம்சங்கள் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை. ஆகையால், பின் பக்க பயணிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத நிலையே தென்படுகின்றது.

Most Read Articles

English summary
Here is some important features missing in swift
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X