வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு..

இந்திய நிறுவனத்தின் மிகவும் கவர்ச்சிகரமான மின்சார பைக் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் தோற்றம் மற்றும் வசதிகளுடன் உள்நாட்டு நிறுவனம் ஒன்று மின்சார பைக் ஒன்றை தயாரித்திருக்கின்றது. கோவாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் கபிரா மொபிலிட்டி. இது ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

இந்நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சில புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அதில் ஓர் பைக்கையே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றது. கேஎம்400 எனும் பைக்கையே அது அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

வருகின்ற பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்றே இப்பைக் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. ஏற்கனவே, மாதம் மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிமுக தேதியும் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனால், இப்பைக்கின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த மின் வாகன ஆர்வலர்கள் தற்போது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

உள்நாட்டில் வைத்து கட்டமைக்கப்பட்ட மின்சார பைக்கே இந்த கேஎம்400 எலெக்ட்ரிக் பைக். ஆனால், இதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் ஆகியவை உலக தர தயாரிப்புகளுக்கு இணையானதாக இருக்கின்றது. அதேசமயம், இதன் தோற்றம் யமஹாவின் எஃப்இசட் மற்றும் டார்க் டி6எக்ஸ் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு இணையானதாக இருக்கின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

இத்தகைய அட்டகாசமான தோற்றத்தில் இப்பைக் வர இருக்கின்ற காரணத்தினாலயே இளைஞர்கள் பலர் இப்பைக்கின் வரவை மிக ஆர்வமாக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் ஆவலைத் தூண்ட செய்யும் வகையிலேயே இப்பைக்கின் அறிமுக தேதி பற்றிய தகவலை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

இந்த மின்சார பைக்கில் என்ன திறன் கொண்ட மின் மோட்டார் மற்றும் பேட்டரிகல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், 100கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜ் மற்றும் மணிக்கு 80 கிமீ என்ற அதிகபட்ச வேகம் ஆகிய திறனில் இந்த மின்சார பைக் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைல்... இந்திய தயாரிப்பு மின்சார பைக்கின் அறிமுக தேதி வெளியீடு...

தொடர்ந்து கேஎம்4000 மின்சார பைக் ரூ. 1.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை மற்றும் அம்சங்கள் ஆகியவை தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கிற்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைய இருக்கின்றது.

குறிப்பு: புகைப்படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Here Is The Launch Date Of Kabira KM 4000 Electric Bike. Read In Tamil.
Story first published: Saturday, February 6, 2021, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X