விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கும் டாப் ஐந்து மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை இந்த பதவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் ஏற்கனவே பன்முக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவற்றிற்கு சற்றே டிமாண்ட் அதிகம் என்பதால் தொடர்ச்சியாக புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

அதேநேரத்தில் தற்போது மிக அதிகளவில் ஸ்கூட்டர் மின்சார இருசக்கர வாகனங்களே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவற்றைக் காட்டிலும் பைக் ரக மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. ஆனால், இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்கப் போவதில்லை.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

ஆம், மிக விரைவில் பன்முக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவற்றில் ஐந்து முக்கியமான மற்றும் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் விரைவில் அறிமுகமாக இருக்கும் இ-பைக் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

அல்ட்ராவைலெட் எஃப்77 (Ultraviolette F77)

இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் இ-பைக்குகளில் ஒன்றாக அல்ட்ராவைலெட் எஃப்77 மாடல் இருக்கின்றது. இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் பைக்காக இதன் அறிமுகம் அமைய இருக்கின்றது. இந்த வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டே காட்சிப்படுத்திவிட்டது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

இதைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டில் இதன் விற்பனைக்கான அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இதன் அறிமுகத்தை சற்றே தள்ளி போக செய்துவிட்டது. தற்போது இதன் அறிமுகம் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வருகையை முன்னிட்டு இந்திய மின் வாகன பிரியர்கள் இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் காக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

எஃப்77 மின்சார பைக்கில் உயர்-தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வெறும் 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் இவ்வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும். இப்பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ரீஜெனரேட்டிப் பிரேக்கிங் வசதி, பைக் டிராக்கிங், ரிமோட் அக்செஸ் வசதி, இணைப்பு தொழில்நுட்பம் என எண்ணற்ற சிறப்பு வசதிகளை இந்த மின்சார பைக் பெற இருக்கின்றது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

ரிவோல்ட் ஆர்வி1 (Revolt RV1)

ரிவோல்ட் நிறுவனம் மிக சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. நிறுவனம் ஆரம்ப நிலை வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது. ஆர்வி1 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் மின்சார பைக்கே நிறுவனத்தின் ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் பைக்காகும். அண்மையில் வெளியேற்றிய ஆர்வி300 பைக்கின் இடத்தை நிரப்பும் வகையில் இப்புதிய மின்சார பைக் களமிறக்க இருக்கின்றது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

இது விலைக் குறைவான மாடலாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக நூறு சதவீதம் உள் நாட்டிலேயே வைத்து இப்பைக்கை உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், என்ன விலையில், என்ன மாதிரியான அம்சங்களுடன் அது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதன் வருகையை மின் வாகன பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

எம்ஃப்ளக்ஸ் ஒன் (Emflux One)

எம்ஃப்ளக்ஸ் ஒன் முதல் முறையாக 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே இது பலரின் மனதை கவர்ந்த மின்சார இருசக்கர வாகனமாக மாறிவிட்டது. புத்தம் புதிய தோற்றம், அதிக கட்டுமஸ்தான பாடி பேனல்கள் மற்றும் நீளமான செங்குத்தான தோற்றம் கொண்ட எல்இடி மின் விளக்கு ஆகியவற்றை இந்த இருசக்கர வாகனம் கொண்டிருக்கின்றது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

மின்சார இருசக்கர வாகனத்தில் எம்ஃப்ளக்ஸ் லித்தியம்-அயன் பேட்டரி, லிக்யூடு கூல்கு மாடுலர் பேட்டரி பேக் ஆகிய பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், எம்ஃப்ளக்ஸ் வார்ப் சார்ஜர் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு சார்ஜ் செய்யும்போது வெறும் 36 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை பெற்றுக் கொள்ள முடியும். வழக்கமான மின்சார பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 3 மணி நேரங்கள் வரை முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும்.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

இதன் மின் மோட்டார் 80 எச்பி பவர் மற்றும் 84 என்எம் டார்க் வரை வெளியேற்றும். மேலும், இது வெறும் 3.0 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த மின் மோட்டார் கொண்டிருக்கின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 200கிமீ வேகம் ஆகும். முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ஜை இது வழங்கும். இத்தகைய அதிக திறன்களுடன் இவ்வாகனம் அடுத்த வருடம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

ரிவோல்ட் கஃபே ரேசர் (Revolt Cafe Racer)

ரிவோல்ட் நிறுவனம் விலை குறைவான ஆர்1 மாடலைத் தொடர்ந்து கஃபே ரேசர் வாகனத்தின் உற்பத்தியையும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக் பற்றிய டீசர் படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த படம் இந்திய மின் வாகன பிரியர்களைப் பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வெளியீடு அரங்கேறி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால், வாகனம் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. ரகசியமாக இந்த பைக்கின் உற்பத்தியில் நிறுவனம் ஈடுபடலாம் என தெரிகின்றது. எனவே இதன் அறிமுகம் மிக விரைவில் நாட்டில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 (Hero Electric AE-47)

நீண்டா நாட்களாக இந்திய மின்சார வாகன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பில் இடம் பிடித்திருக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களில் ஹீரோ எலெக்ட்ரிக்-இன் ஏஇ47 மாடலும் ஒன்று. இந்த மின்சார பைக்கை தயாரிப்பு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்-போவிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

விரைவில் இந்திய சந்தையை கலக்க இருக்கும் மின்சார பைக்குகள்... ஒவ்வொன்னும் வேற லெவல் திறன் கொண்டவை!

இந்த மின்சார பைக்கில் 4kW ஹப் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் திறனை வாகனத்திற்கு வழங்கும். மேலும், இது வெறும் 9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதில், வழங்கப்பட்டிருக்கும் 3.5kWh லித்தியம் அயன் பேட்டரி ஓர் முழுமையான சார்ஜில் 160 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Here is top 5 upcoming e motorcycles list
Story first published: Saturday, November 20, 2021, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X