சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சல பிரதேசத்தை கலக்கிய ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்குகள்!

ஹோண்ட நிறுவனம் அதன் புதுமுக பைக் மாடலான சிபி350க்கும் பெருமை சேர்க்கும் விதமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை வெளியுலகிற்குக் கொண்டு வரும் நோக்கிலும் அண்மையில் சன் சேஸர்ஸ் 2021 (Honda SunChasers2021) எனும் பெயரில் ஓர் பைக் பயண நிகழ்வைத் தொடங்கி வைத்தது.

ஹோண்ட நிறுவனம் அதன் புதுமுக பைக் மாடலான சிபி350க்கும் பெருமை சேர்க்கும் விதமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை வெளியுலகிற்குக் கொண்டு வரும் நோக்கிலும் அண்மையில் 'சன் சேஸர்ஸ் 2021' (Honda SunChasers2021) எனும் பெயரில் ஓர் பைக் பயண நிகழ்வைத் தொடங்கி வைத்தது.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

இந்த நிகழ்வை ஹோண்டாவுடன் இணைந்து அருணாச்சல பிரதேச சுற்றுலாக் கழகமும் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிகழ்வின் முதல் நாளில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளின் தொகுப்பையே தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளோம். வாருங்கள் வீடியோவைக் கீழே காணலாம்.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

இந்த சிறப்பு நிகழ்வில் நாட்டின் பிரபலமான 11 ஆட்டோமொபைல்துறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்துக்கொண்டனர். இதில், நமது டிரைவ்ஸ்பார்க் ஆட்டோ செய்தி தளம் சார்பாக ஜோபோ குருவில்லா பங்கு பெற்றார் என்பது கூடுதல் சிறப்பு. இவர் உட்பட பிற அனைவரும் (11 பேரும்) ஹோண்டாவின் புதுமுக பைக்கான சிபி350 ஹைனெஸ் பைக்கையே பயன்படுத்தினர்.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

இப்பைக்கைக் கொண்டே அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் அவர்கள் அணி வகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பு கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ருக்ஸின் என்ற இடத்தில் தொடங்கியது. பின்னர், பாஸிகாட் வழியாக பயணம் மேற்கொள்ளப்பட்டு போம்ஜிர் எனும் பகுதியிலேயே சன் சேஸர்ஸ் 2021 இறுதி கட்டத்தை அடைந்தது.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

ஒட்டுமொத்தமாக 7 நாட்கள் நடைபெற்ற இப்பயணத்தில் ரைடர்கள் 800க்கும் அதிகமான கிமீ தூரத்தைக் கடந்திருக்கின்றனர். இந்த பயணத்தின் முதல் நாள் சிறப்பு நிகழ்வுகளையே நாம் மேலே பார்த்தோம். அதேசமயம் நாம் பார்த்தது பார்ட் 1 (முதல் நாள்) வீடியோ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

ஹோண்டா சிபி350 ஹைனெஸ்:

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக்350 பைக் மாடலுக்கு போட்டியளிக்கும் வகையில் ஹோண்டா கொண்டு வந்ததே இந்த சிபி350 ஹைனெஸ் பைக். பாரம்பரி டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனம் 384 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினையே பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டமும் கூடுதல் தொழில்நுட்பங்களாக இந்த எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

இந்தியாவில் இப்பைக் ரூ. 1.85 லட்சம் தொடங்கி ரூ. 1.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கை ஹோண்டா நிறுவனம் கருப்பு, சிவப்பு, வெள்ளி, நீலம், சாம்பல் மற்றும் பச்சை ஆகிய ஆறு விதமான நிற தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது.

சன் சேஸர்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் வீடியோ... அருணாச்சலத்தை பார்க்காத இந்த வீடியோவை பாருங்க!

மேலும், இப்பைக்கை தனது 'பிக்விங்' எனப்படும் பிரீமியம் பைக்குகளை விற்பனைச் செய்யும் ஷோரூம்கள் வாயிலாக மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

Most Read Articles

English summary
Here’s The Video Of Day 1 From The Honda CB350 Sunchasers Ride Organised By Honda In Arunachal Pradesh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X