வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த தகவலைக் கீழே காணலாம்.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன சந்தையாக இந்தியா விளங்குகின்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்ற மற்றும் எளிமையான இயக்க வசதியைக் கொண்டவையாக இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இத்துடன், அவை குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும், அதிக எரிபொருள் சிக்கன வசதிக் கொண்டவையாகவும் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

அதிலும், ஸ்கூட்டர்கள் பல மடங்கு அதிக மைலேஜ் தரக் கூடியவையாக இருக்கின்றது. எனவேதான், இந்தியர்கள் மத்தியில் ஸ்கூட்டர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு நிலவுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியை புதிய வாகனத்தால் கொண்டாட நினைப்போர்களுக்கு உதவும் விதமாக நாட்டில் 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)

விலை: ரூ. 70,348 (தொடக்க விலை)

ஹோண்டா ஆக்டிவா 6ஜி இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டராக இருக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. இந்த வாகனம் நாட்டில் ரூ. 70,348 என்ற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஹோண்டா ஆக்டிவா 4 விதமான வேரியண்டுகள் மற்றும் 8 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 109.51 சிசி திறனை வெளியேற்றக் கூடிய பிஎஸ்6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 7.68 பிஎச்பி பவர் மற்றும் 8.79 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. கம்பைன்ட் பிரக்கிங் சிஸ்டத்துடன் கூடிய டிரம் பிரேக்குகள் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125)

விலை: ரூ. 76,240 (தொடக்க விலை)

டிவிஎஸ் ஜூபிடர் 125 புதிய அவதாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் 125 சிசி எஞ்ஜின் வசதிக் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதை முன்னிட்டு இந்த வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரில் ஃப்யூவல் ஃபில்லர் வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

இத்துடன், 2 லிட்டர் குளோவ் பாக்ஸ், 32 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி (2 ஹெல்மெட்டைக் கூட வைத்துக் கொள்ள முடியும்) மற்றும் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் 8.3 பிஎஸ் மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது மிக சிறந்த தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனமாக இருக்கும் என டிவிஎஸ் தெரிவித்திருக்கின்றது.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125)

விலை: ரூ. 85,857 (தொடக்க விலை)

யமஹா ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டர் மைல்டு ஹைபிரிட் வசதி உடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் குறைவான விலையிலும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. ரூ. 85,857 என்ற தொடக்க விலையில் இருந்து இந்த ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

யமஹா ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டரில் 125 சிசி பிஎஸ் தர எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.04 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், 7 விதமான வேரியண்டுகள் மற்றும் 17 விதமான நிற தேர்வுகள் உள்ளிட்டவையும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125)

விலை: ரூ. 89,529 (தொடக்க விலை)

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 89,529 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இரு விதமான வேரியண்டுகள் மற்றும் 5 விதமான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், டிஸ்க் மற்றும் ட்ரம் பிரேக் ஆகிய வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

அப்ரில்லா ஸ்டார்ம் 125 (Aprilia Storm 125)

விலை: ரூ. 90,405 (தொடக்க விலை)

இந்தியாவில் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி ஸ்கூட்டர் மாடலில் அப்ரில்லா ஸ்டார்ம் 125-ம் ஒன்று. இந்த ஸ்கூட்டர் ரூ. 90,405 தொடங்கி ரூ. 95,955 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. எஸ்ஆர் இருசக்கர வாகனத்தின் சகோதரனைப் போல் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வருட முடிவு ஸ்பெஷல்: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

12 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள், க்னாப்பி வீ ரப்பர் டயர்கள் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 124.45 சிசி பிஎஸ்6 தர எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 9.78 பிஎச்பி பவர் மற்றும் 9.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்ரம் பிரேக் ஆகிய வசதிகள் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Here scooters sale in india under rs 1 lakh
Story first published: Thursday, December 30, 2021, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X