ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகும். இது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ப்ரீமியம் தயாரிப்புகளுள் ஒன்றாக விளங்கவுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்றாக இருக்கும் ஏஇ-47 மாடலை தயாரிப்பதற்கு அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் தெரிவித்துள்ளார்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

ஆனால் தற்போதைய கொரோனா சூழலினால் தான் இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் தள்ளிப்போய் கொண்டிருப்பதாகவும் இதன் விலையை மிகவும் குறைவாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

இந்த எலக்ட்ரிக் பைக்கின் உறுதியான அறிமுக தேதி குறித்து எதையும் அவர் கூறவில்லை. நமக்கு தெரிந்தவரையில் ஏஇ-47 எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் 2022ஆம் ஆண்டில் இருக்கலாம். முஞ்சல் அளித்த பேட்டியில், நாங்கள் ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகளுடன் வணிகத்தை துவங்கவுள்ளோம்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

ஏஇ-47 எலக்ட்ரிக் பைக் உள்பட சில தயாரிப்புகள் தயாராக உள்ளன. ஆனால் வெளியீடு நிச்சயம் தாமதமாகி விடும் என்றவர், இதன் அறிமுகம் ஒருவேளை 2022ல் இருக்கலாம் என இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

ஏஇ-47 மட்டுமின்றி ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. ஏஇ-29 என்ற பெயரால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறிப்பிடப்பட்டது.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

அதிகப்பட்சமாக ஏஇ-29 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மணிக்கு 55கிமீ வேகத்தில் ஓட்ட முடியும். ஏஇ-47 ஐ போல் ஹீரோ எலக்ட்ரிக்கின் ப்ரீமியம் வாகனங்களுள் ஒன்றான ஏஇ-29 ப்ளூடூத் வசதியை கொண்ட ஐஒடி (IOT)-ஆல் இயங்கும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

இந்த வசதி மட்டுமின்றி வாகனம் திருடு போவதை தடுக்கும் லாக், மொபைல் சார்ஜர், மொபைல் அப்ளிகேஷன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வாகனத்துடன் நடப்பதற்கு உதவி & ரிவர்ஸ் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் வழங்கி இருந்தது.

ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ-47 பைக், இப்போதைக்கு வராது!! அறிமுகம் தொடர்ந்து தாமதம்!

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாவது முறையாக வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதால், பல நிறுவனங்களது அறிமுகங்கள் அப்படி அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை போல் ஹீரோ எலக்ட்ரிக்கின் அறிமுகங்களும் தாமதமாகியுள்ளன. ஏஇ-27 எலக்ட்ரிக் பைக்கினால் ஏஇ-29 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகமும் அடுத்த 2022ஆம் ஆண்டிற்கு தள்ளி போடப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero AE-47 electric bike launch delayed to next-year. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X