அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

ஹீரோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு பற்றிய பேச்சே அதிகளவில் மக்கள் மத்தியில் தென்பட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, டீசலின் விலையும் ரூ. 100ஐ தொடுமளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால், மக்கள் மின் வாகனங்கள் மற்றும் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் மாறிய வண்ணம் இருக்கின்றனர்.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

இந்த நிலையைத் தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின், ஸ்பிளெண்டர் பிராண்ட் பெயரில் விற்பனையாகும் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிராண்ட்டில்; ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய மாடல்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

இந்த மாடல்களுக்கே சிறப்பு ஆஃபர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தினசரி பயணத்தை மேற்கொள்ளும், அதாவது, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவை விரும்பும் இளைஞர்களின் முதன்மையான தேடல்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் ரக பைக்குகளும் அடங்கும்.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

இந்த பைக்கின் பக்கமே மக்களைக் கவரும் நோக்கில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சிறப்பு கேஷ்பேக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 2000 வரை எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் லாயல்டி போனஸ் போன்ற சிறப்பு சலுகையை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

இதனை பிரத்யேகமாக ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இச்சலுகையை இந்தியாவில் குறிப்பிட்ட டீலர்கள் மட்டுமே வழங்கி வருகின்றனர். ஆகையால், சலுகைகுறித்த மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பைக் விற்பனையாளர் அனுகவும்.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

ஸ்பிளெண்டர் பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளிலேயே ஸ்பிளெண்டர் ப்ளஸ் மாடலே மிகக் குறைந்த விலை கொண்ட வாகனம் ஆகும். இதனை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. அனைத்திலுமே ஒரே மாதிரியான 97.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே காணப்படுகின்றது.

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

இது அதிகபட்சமாக 8.02 பிஎஸ் மற்றும் 8.05 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த பைக் ரூ. 61,845 தொடங்கி ரூ. 65,335 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மட்டுமின்றி ஹீரோவின் ஸ்கூட்டர்களுக்கும் தனித்துவமான சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hero Announces Special Offers & Benefits Only For Splendor Range Bikes. Read In Tamil.
Story first published: Saturday, February 27, 2021, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X