எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் 2021 முதல் அரையாண்டில் விற்பனை செய்யப்பட்ட அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 1.5 வருடமாக அவ்வப்போது ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெரிய அளவில் எந்த சரிவும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சற்று அதிகரித்துதான் உள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

இந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டாக விளங்கும் ஹீரோ எலக்ட்ரிக்கின் விற்பனையும் நல்லப்படியாகவே இருந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலையால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை சற்று குறைந்தது என்னமோ உண்மைதான்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

ஆனால் அதன்பின் இந்த சிறிய சரிவில் இருந்து வேகமாகவே ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் மீண்டு வந்துவிட்டது. கடந்த 2021 ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 4,500 யூனிட் எலக்ட்ரிக் வாகனங்கள் ஹீரோ எலக்ட்ரிக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

இந்த நிலையில் தற்போது, நடப்பு 2021ஆம் ஆண்டின் முதல் அரை பாதியில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அதி-வேக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை சற்று சிறியது போல் தோன்றலாம், ஆனால் இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமே.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வருடத்திற்கு 3 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு தொழிற்சாலை விரிவுப்படுத்தப்பட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 100% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

ஆனால் இது சாத்தியமே. ஏனெனில் இந்தியாவில் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளின் காரணமாக இந்தியாவில் அதிகளவில் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹீரோ எலக்ட்ரிக் விளங்குகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

வரும் மாதங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நாடு முழுவதும் பல மடங்கும் அதிகரிக்கலாம். ஏனெனில் மத்திய அரசாங்கம் சமீபத்தில் தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை அதிகரிப்பது போன்று ஃபேம்-2 திட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

அதுமட்டுமின்றி சில மாநில அரசாங்கங்களும் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளன. ஹீரோ எலக்ட்ரிக்கின் ஆப்டிமா மற்றும் நைக்ஸ் சிட்டி வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரூ.53,600 என்கிற விலையில் இருந்தே விற்பனைக்கு கிடைக்கின்றன. இவ்வாறான குறைவான விலையே ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விளம்பரமாக அமைந்து விடுகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

அதுமட்டுமில்லாமல் இந்த கவர்ச்சிகரமான விலைகளையும், தனது தொழிற்நுட்ப வசதிகளை நம்பி தான் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் உள்ளது. மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று ஹீரோ எலக்ட்ரிக்கின் இ-ஸ்கூட்டர்களுக்கும் முன்பதிவுகள் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அதிகளவில் குவிந்து வருகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

இந்தியாவில் முதன்முதலில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க துவங்கிய நிறுவனங்களுள் ஹீரோ எலக்ட்ரிக்கும் ஒன்று. முதல் தொகுப்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும்போதே இந்தியாவில் புதிய நகரங்களுக்கு சந்தையை விரிவுப்படுத்த இந்த நிறுவனம் துவங்கிவிட்டது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

நம் நாட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடம் வகிப்பது உண்மையில் மிக சவாலான காரியமாகும். ஏனெனில் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மித வேகத்திலோ அல்லது ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று அதி வேகத்திலோ தயாரிக்கும் நிறுவனங்கள் புதியது புதியதாக உருவாகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக்!! 6 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா!

அவற்றையும் தாண்டி, எரிபொருள் ஸ்கூட்டர்கள் வேறு உள்ளன. இவற்றை எல்லாம் சமாளித்து கொண்டே ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் முதலிடம் பிடித்து வருகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு விதமான இரசனை உடன் இருப்பர். எனவே தான், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நீண்ட லிஸ்ட்டாக இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Electric announced sales of over 15,000 electric two-wheelers in H1 2021.
Story first published: Tuesday, August 10, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X