15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஸ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரியை தனது தயாரிப்புகளில் வழங்குவதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் புதிய நிறுவனம் ஒன்றுடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் லாக் 9 மெட்டீரியல்ஸ் (Log 9 Materials). இது ஓர் மின் வாகனங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனம் ஆகும். மின் வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனமாக இது செயல்பட்டு வருகின்றது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இந்த நிறுவனத்துடனேயே நாட்டின் மிகசிறந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) தற்போது கை கோர்த்துள்ளது. மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த அனுபவத்தை வழங்கும் பொருட்டு லாக் 9 மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

ஆம், நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களில் லாக் 9 மெட்டீரியல்ஸின் அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரிகளை பயன்படுத்த இருக்கின்றது. இந்த பேட்டரிகள் மிகவும் குறைவான நேரத்தில் சார்ஜாக கூடியவை. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இது மிக மிக குறைவான சார்ஜிங் நேரம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்பு அனுபவத்தை வழங்கும் பொருட்டே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், லாக் 9 மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கின்றது. மேலும், லாக் 9 மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் பேட்டரிகள் மிக அதிக சார்ஜாகும் திறன் கொண்டவை மட்டுமல்ல அவை குறைந்த பேட்டரி சிதைவு மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்டவை என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இதற்காக தனது பேட்டரியில் செல்-டு-பேக் தொழில்நுட்பத்தை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பல நிலைகளில் பயன்பாட்டை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பேட்டரியை நேரடி விற்பனையாகவோ அல்லது ஸ்வாப்பபிள் நிலையங்களில் கட்டணத்தின் அடிப்படையிலும் வழங்க (பேட்டரி ஓர் சேவை) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

பேட்டரி ஓர் சேவையின் வாயிலாக வாடிக்கையாளர்களால் இந்த பேட்டரியை மாதாந்திர கட்டணத்தின் வாயிலாகவும் பெற்று கொள்ள முடியும். ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பெரும்பாலான (அனைத்து) மின்சார இருசக்கர வாகனங்களும் தனியாக கழட்டி எடுக்கும் பேட்டரி வசதி உடனேயே விற்பனைக்கு கிடைக்கின்றன.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

ஆகையால், லாக் 9 மெட்டீரியல்ஸ் உடன் நிறுவனம் இணைந்திருப்பது அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம், தனது இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் எளிதில் சார்ஜ் செய்து கொள்ளும் விதமாக சார்ஜிங் கருவியை வாடிக்கையாளர்களின் அலுவலகம் அல்லது குடியிருப்பிலேயே இன்ஸ்டால் செய்து தருவது குறிப்பிடத்தகுந்தது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இவற்றின் வாயிலாக சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்படும். இந்த நிலையை போக்கும் பொருட்டே புதிய கூட்டணி செய்யப்பட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை டெலிவரி சேவைக்கு பயன்படுத்துவோர்க்கு இந்த கூட்டணி பெரும் உதவியாக அமைய இருக்கின்றது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இது டெலிவரி மேன் ஓர் டீ குடித்துவிட்டு வருவதற்குள்ளாகவே அல்லது டெலிவரி செய்ய வேண்டிய பொருள் தயாராகுவதற்கு உள்ளாகவே முழு சார்ஜை அடைந்துவிடும். ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமேசான், ஷேடோஃபாக்ஸ், டெல்லிவெரி, ஃப்ளிப்கார்ட் மற்றும் பைக் மேனியா வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

15 நிமிஷத்துலேயே ஃபுல்லா சார்ஜாயிடும்... கஷ்டமர்களுக்காக புதிய நிறுவனத்துடன் கை கோர்த்த Hero Electric!

இதுமட்டுமின்றி, தனி நபர்களிடமும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக மக்கள் பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் மின் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. நிறுவனத்தின் ஆப்டிமா எச்எக்ஸ் (hero optima hx), போட்டான் எச்எக்ஸ் (photon hx) , ஆப்டிமா எல்எக்ஸ் (optima hx) மற்றும் என்ஒய்எக்ஸ் எச்எக்ஸ் (nyx hx) ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

English summary
Hero electric jons hand with log9 materials for fast charging ev battery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X