வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஹீரோ எலக்ட்ரிக் சந்தையில் அதிகளவில் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடியதாக தற்சமயம் விளங்கி வருகிறது.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2021 அக்டோபர் மாத விற்பனை உடன் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ஒட்டு மொத்தமாக 50,331 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அதாவது 50,331 ஹீரோ எலக்ட்ரிக் இ-ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மைல்கல்லை அடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் நடப்பு 2022ஆம் நிதியாண்டினை நல்லதொரு நிலையில் முடிக்கும் முனைப்புடன் உள்ளது.

இதுவரையில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்இதுவரையில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இந்தகைய உயரத்தை அடைய இந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஹீரோ எலக்ட்ரிக் 2007இல் நிறுவப்பட்டது. இந்த பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் மாடல்களாக ஆப்டிமா & என்ஒய்எக்ஸ் என்ற நகர்புறத்திற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ சோகிந்தர் கில் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு 50,000 பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் இதே வேளையில், டெலிவிரிக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மேலும் 16,500 வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோருகிறோம். அதிகரித்துவரும் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய திறன்களை வளர்த்து வருகிறோம் என்றார்.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதற்கு காரணங்களுள் ஒன்றாக இருக்கும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை பங்கு சுமார் 36 சதவீதமாகும். நாடு முழுவதும் மிகவும் அகலமாக பெரும்பாலான மக்களை இதன் தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன. இதற்காக பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் ஹீரோ எலக்ட்ரிக் கூட்டணி வைத்துள்ளது.

இதுவரையில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இந்த 50,000 டெலிவிரிகளை 2021-22 நிதியாண்டு முடிவதற்கு இரட்டிப்பாக்கிட ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லூதியானாவில் வருடத்திற்கு 5 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்ட தொழிற்சாலையை நிறுவி வருகிறது. இந்த தொழிற்சாலையின் உதவியுடன் அடுத்த ஐந்து வருடங்களில் குறைந்து 1 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் விற்பனை செய்ய முடியும் என ஹீரோ எலக்ட்ரிக் நம்பிக்கையாக உள்ளது.

இதுவரையில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்த திட்டமிட்டுவரும் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதேநேரம் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களையும், சார்ஜிங் கட்டமைப்புகளையும் நாடு முழுவதும் விரிவுப்படுத்த சில திட்டங்களை வகுத்து வைத்துள்ளது. 50,000 என்ற பிரம்மாண்ட மைல்கல்லை வெறும் ஏழு மாதங்களில் ஹீரோ எலக்ட்ரிக் கடந்திருப்பதற்கு ஒன்றிய அரசாங்கத்தின் ஃபேம் 2 மானியங்கள் முக்கிய காரணமாகும்.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இந்த மானிய திட்டங்களினால் ஹீரோ எலக்ட்ரிக் இ-ஸ்கூட்டர்களின் விலைகள் கிட்டத்தட்ட ரூ.15,000 வரையில் குறைந்துள்ளன. மேலும், மாநில அரசாங்கங்களும் ஒவ்வொரு விதமான மானியங்களை அறிவித்து வருகின்றன. 2007இல் நிறுவப்பட்டதற்கு பிறகு ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு நிதியாண்டில் அதிகப்பட்சமாக பதிவு செய்யும் டெலிவிரிகள் எண்ணிக்கை இதுவாகும்.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இந்தியாவில் தற்சமயம் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் என்.ஒய்.எக்ஸ், பாண்டான், ஆப்டிமா, ஃப்ளாஷ் மற்றும் அட்ரியா என்பவை அடங்குகின்றன. இவற்றில் என்.ஒய்.எக்ஸ் மற்றும் பாண்டோன் மாடல்கள் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன. இவற்றை அதிகப்பட்சமாக மணிக்கு 42 kmph வேகத்தில் இயக்கலாம்.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

ஃப்ளாஷ் மற்றும் அட்ரியா ஸ்கூட்டர்களை 25 kmph வேகத்திற்கு மேல் இயக்க முடியாது. ஆப்டிமா அதிவேக வெர்சனிலும் கிடைக்கிறது, மற்றும் குறைவேக வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்டிமா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 550 வாட்ஸ் BLDC எலக்ட்ரிக் மோட்டார், 51.2 வோல்ட்/ 30 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் வழங்கப்படுகிறது.

வெறும் 7 மாதங்களில் 50,000 மக்களை சென்றடைந்திருக்கும் ஹீரோ எலக்ட்ரிக்!! டெலிவிரியில் புதிய மைல்கல்

இது சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 85 கிமீ தூரத்திற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லலாம். அதேநேரம் இரட்டை பேட்டரி தேர்விலும் ஆப்டிமா எச்.எக்ஸ் வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் பேட்டரியினால் இந்த வேரியண்ட்டில் 122கிமீ வரையில் சிங்கிள் சார்ஜில் பயணிக்கலாம் என்கிறது ஹீரோ எலக்ட்ரிக்.

Most Read Articles

English summary
Hero Electric Delivery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X