கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

தற்சமயம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஹீரோ எலக்ட்ரிக் கடந்த 2020ஆம் ஆண்டில் விற்பனை செய்த வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

ஹீரோ எலக்ட்ரிக் பிராண்டில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பதில் மாதந்தோறும் முதலிடத்தை பிடிக்கும் இந்த நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50,000 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

மேலும் இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக்கின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விற்பனை மையங்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளதாகவும், இந்தியாவில் சுமார் 500 நகரங்களில் வணிகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சோகிந்தர் கில் கூறுகையில், மிகவும் சவாலான ஆண்டில் இருந்து வெளியே வரும்போது, அந்த வருடத்தில் விற்பனையில் நாங்கள் அடைந்த உச்சத்தை பற்றி பெருமிதம் கொள்கிறோம்.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

2020ஆம் ஆண்டை எதிர்கொண்ட போது எங்களிடம் இரு வழிகள் தான் இருந்தன. அதில் எதிர்த்து போராட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தலில் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லா விதமான சவால்களையும் தாண்டி எங்கள் இலக்கை அடைந்ததில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

கடந்த ஆண்டில் மட்டும் 1,500 புதிய சார்ஜிங் நிலையங்களை கட்டமைத்துள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் வரும் வருடங்களில் விற்பனை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில திட்டங்களை வகுத்து வைத்துள்ளது.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

அதேநேரம் தற்போதைய இருசக்கர வாகனங்களின் தயாரிப்பையும் அதன் லூதியானா தொழிற்சாலையில் இந்த நிறுவனம் அதிகப்படுத்தி வருகிறது. இந்த தொழிற்சாலை தற்போதைக்கு வருடத்திற்கு 70,000 யூனிட் வாகனங்களை தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸையே சாதகமாக்கி கொண்ட ஹீரோ!! 2020ல் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது...

இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்து கிட்டத்தட்ட 2.5 லட்சமாக கொண்டுவருவதே ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தற்போதைய குறிக்கோளாகும். இதன் விளைவாக அடுத்த நிதியாண்டில் விற்பனை சுமார் 15 சதவீதம் அதிகரிக்கும் எனவும் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Electric retains the top spot in two-wheeler EV sales in 2020. Read In Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X