HeroElectric OptimaHX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்! வேற ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எச்எக்ஸ் (Hero Electric Optima HX) இ-ஸ்கூட்டரில் புதிதாக க்ரூஸ் கன்ட்ரோல் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், அதன் புகழ்வாய்ந்த இ-ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஆப்டிமா எச்எக்ஸ்-இல் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric)-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இ-ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஆப்டிமா எச்எக்ஸ் (Optima HX) இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரிலேயே நிறுவனம் தற்போது க்ரூஸ் கன்ட்ரோல் சிறப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கின்றது.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

குறைந்த பராமரிப்பு செலவு, குறைவான செலவில் அதிக பலன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் வாகனங்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மக்களின் தேவை நவீன கால அம்சங்களின் மீது பெருமளவில் இருப்பதை உணர்ந்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் நவீன கால சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர்.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

அந்தவகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆப்டிமா எச்எக்ஸ் இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. வாகன பிரியர்களைக் கவரும் பொருட்டு இந்த வசதியை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கியிருக்கின்றது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதியை வழக்கமான அம்சமாக ஹீரோ எலெக்ட்ரிக் வழங்குகின்றது.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

இந்த இ-ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 55,850 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிங்கிள் பேட்டரி மற்றும் இரட்டை பேட்டரி என இரு விதமான தேர்வுகளில் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இரட்டை பேட்டரி தேர்வின் விலை ரூ. 65,640 ஆகும்.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

புதிய க்ரூஸ் கன்ட்ரோல் கொண்ட ஆப்டிமா எச்எக்ஸ்ஸ இ-ஸ்கூட்டருக்கு வரும் ஜனவரி 5ம் தேதி முதல் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. புதிய ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. வேறு எந்த அம்சமும் புதிதாக சேர்க்கப்படவில்லை.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

க்ரூஸ் கன்ட்ரோல் வசதியை ரைடர் ஒரு பொத்தானை அழுத்துவதன் வாயிலாகவே ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதை ஆக்டிவேட் செய்த பின்னர் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை 'க்ரூஸ்' சிம்பளை வெளிப்படுத்தும்.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

இந்த அம்சத்தைத் தொடர்ந்து ரிமோட் லாக்கிங், சாவியில்லா இயக்கம், திருட்டை தவிர்க்க உதவும் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்களும் ஆப்டிமா எச்எக்ஸ் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் இ-ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் 1.2 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்மசாக மணிக்கு 42 கிமீ எனும் வேகத்தில் இயங்கக் கூடியது. இத்துடன், இ-ஸ்கூட்டரில் 51.2 வோல்ட், 30 ஆம்ஸ் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒற்றை முழுமையான சார்ஜில் 82 ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது.

Hero Electric Optima HX இ-ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அறிமுகம்... வேறு ஏதாவது புதிய வசதி சேர்த்திருக்காங்களா?

இது ஒற்றை பேட்டரி தேர்வில் கிடைக்கும் இ-ஸ்கூட்டரின் ரேஞ்ஜ் திறன் ஆகும். இதன் இரட்டை பேட்டரி தேர்வு அதிகபட்சமாக 122 கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தும். இவற்றை வைத்து பார்க்கையில் ஹார்டுவேர் கட்டமைப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles
English summary
Hero electric updated optima hx e scooter with cruise control feature
Story first published: Friday, December 24, 2021, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X