ப்ளூடுத் இணைப்பு வசதி கொடுத்திருக்காங்க... F2i, F3i இ-சைக்கிள்கள் அறிமுகம்! இது Hero Lectro தயாரிப்புங்க!

ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) நிறுவனத்தின் புதுமுக இ-சைக்கிள்கள் இரண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரண்டும் மலைப் பாதை (mountain bicycles) பயன்பாட்டு வசதிக் கொண்டவை ஆகும். இவற்றில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஸ்மார்ட் எல்சிடி திரை வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது போன்று இன்னும் பல அம்சங்களும் இ-சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

பிரபல மிதிவண்டி உற்பத்தி நிறுவனமான ஹீரோ சைக்கிள் (Hero Cycles), அதன் பிரபல ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro) பிரிவின்கீழ் இரு புதுமுக இ-சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஃப்2ஐ (F2i) மற்றும் எஃப்3ஐ (F3i) இரண்டும் மலை பாதை பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

அதே நேரத்தில், நகர்புற சாலை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த வாகனம் உருவாக்கப்பட்ட இருக்கிறது. ஆகையால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமல்ல நகர்புறங்களின் தினசரி பயன்பாட்டிற்கும் உகந்த இ-மிதிவண்டியாக இவை இருக்கின்றன. இதில், எஃப்2ஐ மாடல் இ-சைக்கிளுக்கு ரூ. 39,999 என்ற விலையும், எஃப்3ஐ மாடலுக்கு ரூ. 40,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இளம் தலைமுறையினர்களைக் கவரும் பொருட்டு அதிக சிறப்பு வசதிகளுடன் இ-சைக்கிள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஸ்மார்ட்போன் செயலி உள்ளிட்ட வசதிகள் இ-சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வசதிகளைப் பெறும் இந்தியாவின் முதல் இ-சைக்கிள் இதுவே ஆகும்.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இவற்றின் வாயிலாக, செல்போன் - இ மிதிவண்டியை இணைப்பதன் வாயிலாக பல்வேறு தகவல்களை அதன் பயனர்களால் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள முடியும். இரு இ மிதிவண்டிகளிலும் கணிசமான ரேஞ்ஜை வழங்கும் வகையில் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிமீ வரையில் நமக்கு ரேஞ்ஜ் வழங்கும்.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இந்த திறன் வெளிப்பாட்டிற்காக 6.4 Ah ஐபி67 (IP67) தரத்திலான தண்ணீர் மற்றும் தூசியால் பாதிக்காத வசதிக் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, 250 வாட் திறன் கொண்ட பிஎல்டி மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரின் உச்ச வேகம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

அதேநேரத்தில், நான்கு விதமான ரைடிங் மோட்கள் இவ்வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெடல், த்ரோட்டில், இவற்றுடன், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மேனுவல் ஆகிய மோட்களே இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 7 ஸ்பீடு கியர், 100 மிமீ அளவுள்ள சஸ்பென்ஷன், 27.5 மற்றும் 29 இரட்டை அலாய் ரிம்கள் மற்றும் ட்யூவல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவையும் இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இவற்றுடன் சிறிய எல்இடி திரை கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் ஸ்மார்ட் திரை ஆகும். பன்முக தகவல்களை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான வசதிகளினாலேயே இந்த இ-சைக்கிள் மலைப் பாதை பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக மாறியிருக்கின்றது.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

நாட்டில் ஹீரோ நிறுவனத்தின் கீழ் 600க்கும் அதிகமான விற்பனையகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தின் வாயிலாகவும் எஃப்2ஐ மற்றும் எஃப்3ஐ ஆகிய இ-மிதிவண்டிகள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன. நிறுவனம் அதன் சிறப்பு எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் செயல்படுத்தி வருகின்றது.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இவற்றிலும், இ-சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி சில ஆன்லைன் வர்த்தக தளங்களின் வாயிலாகவும் இ-சைக்கிள்கள் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவின் முதல் ப்ளூடுத் இணைப்பு இ-சைக்கிள்கள்... F2i, F3i இ-மிதிவண்டிகள் அறிமுகம்... இது Hero Lectro தயாரிப்புங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹீரோ லெக்ட்ரா இ-சைக்கிள்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவற்றின் வருகை குறித்து நிறுவனத்தின் சிஇஓ ஆதித்யா முஞ்ஜல் கூறியதாவது, "எஃப்2ஐ மற்றும் எஃப்3ஐ ஆகியவை எம்டிபி (Mountain Bikes) பிரிவில் இந்தியாவின் முதல் இணைக்கப்பட்ட மின்சார இ-சைக்கிள்களாக வந்திருக்கின்றன.வளர்ந்து வரும் மின்வாக சந்தையில் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.

Most Read Articles
English summary
Hero f2i f3i mtb e bicycles launched in india with Bluetooth connectivity
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X