ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

ஹீரோ க்ளாமர் பைக்கின் 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசன் பைக் இந்தியாவில் ரூ.73,700 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

நிறுவனம் துவக்கப்பட்டதில் இருந்து 100 மில்லியன் வாகனங்கள் தயாரிப்பு என்ற மைல்கல்லை அடைந்ததை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய புதிய ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்து கொண்டாடி வருகிறது.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

இந்த வகையில் ஹீரோவின் பிரபலமான ஸ்பிளெண்டர், பேஷன் ப்ரோ, எக்ஸ்ட்ரீம் 160ஆர் உள்ளிட்ட பைக்குகளிலும், டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 போன்ற ஸ்கூட்டர் மாடல்களிலும் ஸ்பெஷல் எடிசன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

அவற்றை தொடர்ந்து தற்போது க்ளாமர் பைக் மாடலின் 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசனை ரூ.73,700 என்ற விலையில் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசன் ஹீரோ வாகனங்களை போன்று க்ளாமர் 100 மில்லியன் எடிசனும் வெள்ளை-சிவப்பு என்ற இரட்டை நிறங்களில் தான் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

கட்டம் கட்டமான கொடி டிசைன் பைக்கின் ஹெட்லைட் கௌல், பெட்ரோல் டேங்க் மற்றும் பின்பக்க பேனல் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் ட்ரம் & டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

இதில் ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் விலை ரூ.73,700 ஆகவும், டிஸ்க் ப்ரேக்கின் விலை ரூ.77,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமான பெயிண்ட்டை தவிர்த்து பார்த்தோமேயானால் பைக்கின் தோற்றத்திலும் வழங்கப்படும் வசதிகளிலும் வேறெந்த மாற்றமும் இல்லை.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

100 மில்லியன் எடிசன் என்ற முத்திரை பெட்ரோல் டேங்கின் மீது வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ க்ளாமருக்கு வழக்கமாக வழங்கப்படும் ஹலோஜன் ஹெட்லைட், துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பருமனான பெட்ரோல் டேங்க் மற்றும் பிளவுப்பட்ட ஸ்டைலில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அப்படியே தான் தொடரப்பட்டுள்ளன.

ஹீரோ க்ளாமர் 100 மில்லியன் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.73,700

ஹீரோ க்ளாமரில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hero Glamour 100 Million Edition launched in India at Rs 73,700.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X