மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக மிக மலிவு விலைக் கொண்ட எச்எஃப் 100 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை குறித்த தகவலைக் கீழே காணலாம்.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எச்எஃப் 100 எனும் புதுமுக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கிற்கு மிக குறைந்தபட்ச விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ரூ. 49,400 என்ற மலிவு விலையையே நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

இந்த மிக குறைந்த விலையில் எச்எஃப் 100 பைக் நாட்டில் விற்பனைக்கு வந்திருப்பதால் இந்தியாவின் மிக மலிவு விலைக் கொண்ட பைக்காக இது மாறியிருக்கின்றது. அண்மையில் ஹீரோ நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

இந்த அறிவிப்பின்படி ஏப்ரலம் 1ம் தேதி முதல் புதிய உயர்ந்த விலையிலேயே ஹீரோ நிறுவனத்தின் அனைத்து பைக்குகளும் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில் குறைந்த விலை இருசக்கர வாகனத்தின் வாயிலாக மக்களைக் கவரும் வகையில் இப்புதிய எச்எஃப்100 மாடல் பைக்கை ஹீரோ களமிறக்கியிருக்கின்றது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

எச்எஃப் டீலக்ஸ் பைக்கைக் காட்டிலும் ரூ. 1,300 குறைவான விலையில் புதிய எச்எஃப்100 விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைவிட குறைந்த விலையில் பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் பைக்குகள் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

சிடி100 ரூ. 49,152 என்ற விலையிலும், பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் ரூ. 49,261 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதைவிட ஒரு சில நூறுகளையே புதிய ஹீரோ எச்எஃப் 100 பைக் கொண்டிருக்கின்றது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

புதிதாக என்ன வசதி இதில் இடம்பெற்றிருக்கு?

விலையைக் குறைப்பதற்காக மிகவும் சிம்பிளான தோற்றத்தை எச்எஃப்100 பைக்கிற்கு ஹீரோ வழங்கியுள்ளது. இருப்பினும், இதன் தோற்றம் எச்எஃப் டீலக்ஸ் பைக்கை ஒத்ததாகவே உள்ளது. உலோக ரெயில், குரோம் பூச்சு கொண்ட அணிகலன்களுக்கு பதிலாக கருப்பு நிறத்திலான அணிகலன்கள் ஆகியவை இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் மிகவும் சாதாரண அடிப்படை திறன் கொண்ட சஸ்பென்ஷன்களையே ஹீரோ இதில் பயன்படுத்தியுள்ளது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

இவ்வாறு வெளிப்புறத்தில் மட்டுமே லேசான மாற்றங்களை ஹீரோ செய்துள்ளது. எஞ்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றத்தையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. எச்எஃப் 100 பைக்கில் 97.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவர் இன்ஜெக்டட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.36 பிஎஸ் மற்றும் 8.05 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

மிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா?

இவையே இந்தியாவின் புதிய விலைக் குறைந்த பைக்கின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த புதுமுக மலிவு விலை பைக் தினசரி மற்றும் கிராமப்புற இருசக்கர வாகன பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்தையைக் கைப்பற்றும் நோக்கிலேயே ஹீரோ இப்பைக்கை களமிறக்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Hero Launched Most Affordable HF 100 Bike In India: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X