விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு வசதி என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

கார்களில் மட்டுமே கிடைத்து வந்த இணைப்பு தொழில்நுட்பம் தற்போது இருசக்கர வாகனங்களிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைப்பு வசதியை வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

இந்த இணைப்பு தொழில்நுட்பமானது செல்போன் செயலிகளின் வாயிலாக இயங்குகின்றன. இத்தகைய ஓர் சிறப்பு வசதியை இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் வழங்கி வருகின்றது. இந்த வசதியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

ரூ. 4,999 என்ற வருட சந்தாவின் அடிப்படையில் இச்சேவையை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள டீலர்கள் வாயிலாக இச்சேவையை ஹீரோ வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த இணைப்பு வசதியின் வாயிலாக எண்ணற்ற சிறப்பு சேவைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

இதில் ஓர் மிக முக்கியமான அம்சமாக கருதப்படும் டாப்பிள் அலெர்ட் (Topple Alert feature) வசதியையே தற்போது எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) பைக்கில் ஹீரோமோட்டோகார்ப் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த அம்சமானது, ஒரு வேலை இருசக்கர வாகனம் கவிழ்ந்தாலோ அல்லது அசம்பாவித சூழ்நிலைக்கு ஆளாகினாலோ அவசரகால தொடர்புகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு வாயிலாக தகவலை தெரிவிக்கும்.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

இது இருசக்கர வாகன பயனருக்கு உடனடி உதவியை வழங்க உதவியாக இருக்கும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தக்க சமயத்தில் உயிர் காக்க இந்த தொழில்நுட்பம் உதவும். இந்த சிறப்பு வசதியை விரைவில் தனது அனைத்து தயாரிப்புகளிலும் வழங்க ஹீரோ நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக தனது டீலர்களை நிறுவனம் தயார்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

ஹீரோ இணைப்பு தொழில்நுட்பம் இ-சிம் வாயிலாக இயங்குகின்றது. வழக்கமான சிம் கார்டை போலவே இதுவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தொழில்நுட்பம் வாயிலாக பைக்கை டிராக் செய்வது, முந்தைய பயணத்தின் வரலாற்றை அறிவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரல் நுனியில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

அதாவது, ஸ்மார்ட்போன் திரையிலேயே அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். இருசக்கர வாகனத்துடன் நமது செல்போனை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் பல்வேறு தகவல்களை உடனுக்கு உடன் நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

ஹீரோ இணைப்பு தொழில்நுட்பத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்ன என்றால், வாகனம் அங்கீகரிக்கப்படாத இடங்களுக்கு பயணிக்கும் என்றால் அதுகுறித்த தகவலை அதன் பயனருக்கு உடனடியாக வழங்கும். இந்த வசதி திருட்டை தவிர்க்க உதவும். மேலும், வாகனம் திருடப்பட்டால் அது இருக்கும் இடத்தை உடனடியாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

மற்றொரு பயனுள்ள அம்சமாக 'லொகோட்' வசதி இருக்கின்றது. இதன் வாயிலாக பைக் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்துக் கொள்ள முடியும். கூகுள் மேப்ஸ் வாயிலாக இந்த வசதி வழங்கப்படுகின்றது. தொடர்ந்து, வாகனம் ஸ்பீடு லிமிட் செட் செய்துவிட்டு அதை தாண்டினால் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடக்கூடிய அம்சமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஆனால், இதன் அறிமுகம் எப்போது, என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது போன்ற முக்கிய தகவல்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

விபத்து நேரத்தில் உதவும் புதிய தொழில்நுட்ப வசதி... Hero Xpulse 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் வசதி அறிமுகம்!

கடந்த செப்டம்பர் 20ஆம் முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ரூ.3 ஆயிரம் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு மாடல்களை பொருத்து உயர்த்தப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திடீர் விலை உயர்விற்கு உற்பத்தி பொருட்களின் விலை உயர்வே காரணம் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Hero launched topple alert featured xpulse 200 bike in india
Story first published: Thursday, September 30, 2021, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X