ஹீரோவின் 2 ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு! இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுங்க!

ஹீரோ நிறுவனத்தின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. இப்பைக்குகளின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவலைக் கீழே காணலாம்.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 160ஆர் சிறப்பு எடிசன் பைக்கைத் தொடர்ந்து, ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் பேஸன் ப்ரோ ஆகிய மோட்டார்சைக்கிள் மாடலிலும் சிறப்பு எடிசனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஹீரோ நிறுவனம் அதன் 100 மில்லியன் தயாரிப்பு வரலாற்று நிகழ்வைத் தற்போதுக் கொண்டாடி வருகின்றது. இதனடிப்படையில் அண்மையில் அதன் தயாரிப்புகளில் சிறப்பு பதிப்பு மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் விரைவில் புதிய சிறப்பு எடிசன் பைக்குகளை நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இவற்றையே தற்போது ஒன்றன் பின் ஒன்றாக நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், நேற்றைய தினம் 100 மில்லியன் சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது ஹீரோ. இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் பேஷன் ப்ரோ ஆகிய இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பெஷல் எடிசனையும் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

புதிய 100 மில்லியன் எடிசன் ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் விலை ரூ. 67,095 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இதையடுத்து அறிமுகமாகியிருக்கும் மற்றுமொரு 100 மில்லியன் எடிசன் பைக் மாடலான பேஷன் ப்ரோ இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ட்ரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான வேரயண்டுகளில் கிடைக்கும். இதில், ட்ரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 69,200 என்றும், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 71,400 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் சிறப்பு அலங்கார வேலைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

அதாவது, இரு நிற பெயிண்ட் பூச்சு மற்றும் 100 மில்லியன் எடிசன் என்பதை வெளிக்கக் காட்டக் கூடிய சிறப்பு ஸ்டிக்கர்கள் ஆகியவை மட்டுமே இப்பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாறுதல்களும் இடம்பெறவில்லை. புதிய சிறப்பு எடிசன் ஸ்பிளெண்டர் பைக்கில் 97.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இது, அதிகபட்சமாக 7.9 பிஎச்பி மற்றும் 8.05 என்எம் டார்க்கை வெளியேற்றக்கூடியது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் பேஷன் ப்ரோ சிறப்பு எடிசன் பைக்கில் 113சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 9 பிஎச்பி மற்றும் 9.89 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

ஹீரோவின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகம்... அட்டகாசமா இருக்கு... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இந்த பைக்குகளைத் தொடர்ந்து சிறப்பு பதிப்பாக டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஆகிய பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவை மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கூறிய அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hero Launcehs 100 Million Edition Of Hero Splendor Plus, Passion Pro In India. Read In Tamil.
Story first published: Saturday, March 13, 2021, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X