சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

4 ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் ஐந்தாவது இருசக்கர வாகனமாக பிஎஸ்6 தர எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கை ஹீரோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், சரவெடி வெடிக்கும் வகையில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது. அண்மையில், இந்நிறுவனம் 100 மில்லியன் தயாரிப்பு வரலாற்றை நிகழ்வை எட்டியது. இதனை முன்னிட்டு சிறப்பு பதிப்பு வாகனங்களை நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

அந்தவகையில், நேற்றைய தினம் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 100 மில்லியன் எடிசன் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1,08,750 நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் 100 மில்லியன் சிறப்பு எடிசன் பைக்குகளான ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் பேஷன் ப்ரோ ஆகிய மோட்டார்சைக்கிளை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, அடுத்த சில மணி நேரங்களிலேயே டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களிலும் 100 மில்லியன் எடிசனை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே மீண்டும் ஓர் புதிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கையே நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது 100 மில்லியன் சிறப்பு பதிப்பு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை பிஎஸ்6 தரத்தில் மட்டுமே உருவாக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1,12,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

பிஎஸ்4 தரத்தில் விற்பனைக்குக் கிடைத்த வந்த எக்ஸ்பல்ஸ் 200டி மாடலைக் காட்டிலும் இது சற்று கூடுதல் விலைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, பிஎஸ்4 எக்ஸ்பல்ஸ் 200டி பைக் ரூ. 95,500க்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த விலையால்தான் இப்பைக் இந்தியாவின் குறைந்த விலை அட்வென்சர் டூரர் ரக வாகனமாக பார்க்கப்பட்டு வந்தது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

ஆனால், புதிய தரத்தால் காஸ்ட்லியான பைக்காக இது மாறியிருக்கின்றது. இப்பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு அடுத்தபடியாக புதிதாக ஆயில்-கூல்டு சிஸ்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் சேர்த்திருக்கின்றது. இதுதவிர வேறெந்த மாற்றத்தையும் இப்பைக்கில் காண முடியவில்லை. ஆகையால், முந்தைய மாடலில் இடம்பெற்றிருந்த அதே 199.6சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரே இதில் காண முடிகின்றது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

இது அதிகபட்சமாக 17.8 பிஎச்பியையும், 16.15 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது. இதே எஞ்ஜின் பிஎஸ் 6 தரத்தில் விற்பனைக்குக் கிடைத்தபோது 18.1 பிஎச்பியையும், 17.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றி வந்தது குறிப்பிடத்தகுந்தது. புதிய மாசு உமிழ்வு தரத்தால் இதன் திறன்பாடு குறைந்து காணப்படுகின்றது.

சரவெடி வெடிக்கும் ஹீரோ... நான்கு ஸ்பெஷல் எடிசன் டூ வீலர்களை அடுத்து பிஎஸ்6 தர பைக் அறிமுகம்...

தொடர்ந்து, பிஎஸ்4 எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் இடம்பெற்ற ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு, பேந்தர் கருப்பு மற்றும் மேட் ஷீல்ட் கோல்ட் ஆகிய நிற தேர்வுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Hero Launches XPulse 200T BS6 Bike In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X