ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள ஹீரோ கனெக்ட் வசதியினை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி பார்க்கலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் இணைப்பு வசதிகள் மிகவும் கட்டாயமாகி வருகின்றன. வாகனத்தை மொபைல் போனுடன் இணைக்கும் வசதி கூடுதல் சவுகரியங்களை வழங்குவது மட்டுமின்றி, பயணத்தையும் எளியதாக மாற்றுகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

அதுமட்டுமின்றி வாகனத்தின் பாதுகாப்பு தரத்தையும் மேம்படுத்துகின்றன. இந்திய சந்தையில் இணைப்பு தொழிற்நுட்பத்தை முதன்முதலாக தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்தது. ஆனால் தற்போது இருசக்கர வாகனங்களில் கூட இணைப்பு வசதிகள் கொண்டுவரப்படுகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

இதன்படி இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2020 பிப்ரவரியில் அதன் இணைப்பு தொழிற்நுட்பத்தை அறிமுகம் செய்தது. ஹீரோ கனெக்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த இணைப்பு தொழிற்நுட்பம் ஆரம்பத்தில் சில நகரங்களில், சில டீலர்ஷிப் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்தது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

ரூ.4,999இல் வழங்கப்படும் ஹீரோ கனெக்ட் வசதியானது தற்சமயம் ஹீரோ மோட்டோகார்ப்பின் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்ட்ரீம் 160ஆர், டெஸ்டினி 125, பிளஷர்+ மற்றும் பிளஷர்+ பிளாட்டினம் இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு ப்ளாட்ஃபாரம் எதிர்காலத்தில் மற்ற ஹீரோ தயாரிப்புகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

இந்த வகையில் தற்போது மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஹீரோ கனெக்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை வெளிக்காட்டும் விதமான டீசர் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள இந்த வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவில் புதிய பிரிஸ்மாடிக் மஞ்சள் நிறத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது. விற்பனையில் இந்த ஹீரோ ஸ்கூட்டருக்கு ஹோண்டா ஆக்டிவா 125, சுஸுகி ஆக்ஸஸ், யமஹா ஃபேஸினோ உள்ளிட்டவையும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரும் போட்டியாக விளங்கவுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

ஹீரோ கனெக்ட் ப்ளாட்ஃபாரம் ஆனது இ-சிம் மற்றும் டெலெமேட்டிக்ஸ் வன்பொருளை கொண்டதாக உள்ளது. செல்லுலார் நெட்வொர்க்குகள் மூலம் செயல்படுகின்ற இந்த வசதி ஏற்கனவே கூறியதுபோல் வாகனத்திற்கும், மொபைல் செயலிக்கும் இடையே பாலம் போல் உள்ளது. ஹீரோ கனெக்ட் வசதியானது ரைடர் பாதுகாப்பு, வாகன பாதுகாப்பு மற்றும் டிரைவிங் குறிப்பு என்ற மூன்றால் வகைப்படுத்தப்படுகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சமாக டோப்பிள் எச்சரிக்கை வசதியினை ஹீரோ கனெக்ட் வழங்குகிறது. இது வாகனம் விபத்தில் சிக்கினாலோ அல்லது வாகனம் கவிழ நேர்ந்தாலோ தன்னிச்சையாக குறுஞ்செய்தியை உரிமையாளர் வாகனத்துடன் இணைந்த எண்ணிற்கு அனுப்பிவிடும். டோப்பிள் (கவிழ்தல்) எச்சரிக்கை வசதியானது முதன்முதலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

வாகன பாதுகாப்பு அம்சங்களாக, நேரலை டிராக்கிங், டோ அவே எச்சரிப்பான், ஜியோ ஃபென்சிங் மற்றும் பார்க்கிங் பகுதியை காட்டுதல் உள்ளிட்டவற்றை இந்த இணைப்பு வசதியின் மூலம் பெறலாம். டிரைவிங் குறிப்புகளாக பயண பகுப்பாய்வு, டிரைவிங் ஸ்கோர் மற்றும் அதிவேக எச்சரிப்பான் போன்றவை அடங்குகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

எதிர்காலத்தில் இவற்றுடன் மேலும் சில பாதுகாப்பு வசதிகளையும் சேர்க்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ கனெக்ட் மற்றும் புதிய மஞ்சள் நிற பெயிண்ட்டை தவிர்த்து மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் வேறெந்த அப்டேட்டையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சேர்க்கவில்லை.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-இல் 9 பிஎச்பி மற்றும் 5500 ஆர்பிஎம்-இல் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இதன் 124.6சிசி, ஏர்-கூல்டு என்ஜின் உடன் மாறுப்பட்ட டிரைவ் கியர்பாக்ஸ் இணைக்கபடுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக்கும், பின்பக்கத்தில் சுருள்-லோடு ஹைட்ராலிக் டேம்பரும் வழங்கப்படுகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதியதாக ஹீரோ கனெக்ட் வசதி!! வெறும் ரூ.4,999-இல்..!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.73.2 ஆயிரத்தில் இருந்து ரூ.76.7 ஆயிரம் வரையில் உள்ளன. இவ்வாறான புதிய அப்டேட்களுக்கு மத்தியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அதன் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் 4-வால்வு வெர்சனை சந்தையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hil jjja
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X