உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பிரிந்து நடப்பாண்டுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இரு நிறுவனங்களும் கடந்த 2011ஆம் ஆண்டு தங்களின் கூட்டணியை முறித்துக் கொண்டன.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இதையடுத்து இரு நிறுவனங்களும் தனி-தனியாக நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இரு நிறுவனங்களும் கூட்டணியில் செயல்பட்டபோது கிடைத்ததைப் போலவே தற்போதும் இரு நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியாவில் கிடைத்து வருகின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இந்த நிலையில், தான் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியாக செயல்படத் தொடங்கிய ஆண்டு நினைவுத் தினத்தை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டாடி வருகின்றது. இந்நிகழ்வை தற்போது விழாவாகவே ஹீரோ மோட்டோகார்ப் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இந்த விழாவை முன்னிட்டு மிக சமீபத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டது. இந்திய மின் வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த செயலை அது மேற்கொண்டது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை கோகோரோ எனும் நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி இருக்கும் என்பது பற்றிய படத்தையே நிறுவனம் நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மற்றுமொரு தரமான சம்பவத்தை தற்போது ஹீரோ செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

அதாவது, உலக சாதனை படைக்கும் வகையில் தனது நிறுவனத்தின் சின்னத்தை மிகவும் பிரமாண்டமாக ஹீரோ உருவாக்கியுள்ளது. தனது புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கைக் கொண்டு இந்த பிரமாண்ட சின்னம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இருசக்கர வாகனத்தைக் கொண்டு இந்தளவு மிக பெரிய சின்னம் உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். ஆகையால் இது தற்போது கின்னஸ் உலக சாதனையில் (GUINNESS WORLD RECORDS) இடம் பிடித்திருக்கின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

சுமார் 1000 அடி நீளம், 800 அடி அகலம் என்ற பரப்பளவில் 1845 ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்குகளைக் கொண்டு இந்த சின்னம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த உலக சாதனையை ஹீரோ மோட்டோகார்ப் செய்திருக்கின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

ஹீரோ நிறுவனத்தின் இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்குறித்த தகவலை வெளியிட்டு மக்களையும், இந்திய இருசக்கர வாகன உலகையும் கிறங்கடிக்க செய்த நிலையில் தற்போது உலக சாதனைப் படைக்கும் வகையில் சின்னத்தை உருவாக்கியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதி படத்தை மட்டுமே வெளியிட்டிருந்தது. அதாவது, எலெக்ட்ரிக் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க உருவம் தெரியாத வண்ணம் வெறும் பக்கவாட்டு பகுதி மட்டுமே தெரியும் வகையில் அதன் படத்தை வெளியிட்டிருந்தது.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

இந்த இருசக்கர வாகனத்தை மிக விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இந்த படத்தை வெளியிட்ட கையோடு முக்கிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையை பல புதிய தயாரிப்புகள் அலங்கரித்து வருகின்றன.

உலக சாதனை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி ஓர் சம்பவத்தை இதுக்கு முன்னாடி எந்த நிறுவனமும் செய்யல!

மிக விரைவில் ஓலா மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையை அதகளப்படுத்த இருக்கின்றன. இவை இம்மாதம் 15ம் தேதி நாட்டில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த நிலையில் தன் பங்காக ஹீரோ நிறுவனம் புதிய மின் வாகனத்தை எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவில் மின் வாகனங்களுக்கு தேவையான நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முன்னணி நிறுவனங்கள் தொடங்கி, ஆரம்ப நிலை நிறுவனங்கள் வரை இந்தியாவில் போட்டிப் போட்டுக் கொண்டு மின்சார வாகனங்களை களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் மிக விரைவில் ஹீரோ மோட்டோகார்ப்பும் இணைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hero motocorp creats worlds largest motorcycle logo in chittoor plant
Story first published: Wednesday, August 11, 2021, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X