முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

ஹரியானா மாநிலத்தில் சுமார் 70 கொரோனா முன்கள சுகாதார பணியாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் வழங்கி சிறப்பித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

‘சக்கரங்களில் கொரோனா போராளிகள்' என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாகவே இந்த 70 இருசக்கர வாகனங்கள் முன்கள பணியாளர்களுக்காக ஹரியானா அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

உலகின் மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் அதன் 'கார்பிரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு' என்ற பிரிவில் இத்தகைய திட்டங்களை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இந்த 70 ஹீரோ இருசக்கர வாகனங்களில் கிட்டத்தட்ட 50 யூனிட்கள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்காகும்.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

மீதி 20, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களாகும். இவை அனைத்தும் ஹரியானாவின் சுகாதார துறை இயக்குனரிடம் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் இவை மாநிலத்தில் உள்ள சுகாதார முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

மேலும், இந்த இருசக்கர வாகனங்கள் நிச்சயம், மருத்துவ சேவை தேவைப்படுவோரின் இருப்பிடத்திற்கு செல்லவது உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

வாகனங்களை பெற்று கொண்ட ஹரியானாவின் சுகாதார துறை இயக்குனர் டாக்டர். வீனா சிங் பேசுகையில், இந்த ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு உதவியாக இருக்கும். மேலும், ஹீரோ மோட்டோகார்ப் தங்களது ஆதரவை வழங்கியதற்கு நன்றி.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

இந்த உதவி, மாநிலம் முழுவதும் கோவிட்-19 ஐ தடுப்பதற்கும், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் நிவாரண நடவடிக்கைகளின் நோக்கத்தை கொண்டு செல்வதற்கும் எங்களை ஊக்கப்படுத்துகிறது. ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பொறுப்புள்ள நிறுவனங்களின் உதவிக் கைகள் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் எங்களது பணியை வலுப்படுத்துகின்றன என்றார்.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

ஹரியானா மாநிலத்தின் சுகாதார துறையை வலுப்படுத்துவதிலும், கொரோனா வைரஸிற்கு எதிரான தங்களது பதிலாக புதிய ‘சக்கரங்களில் கொரோனா போராளிகள்' என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

70 ஹீரோ இருசக்கர வாகனங்களையும் சிறப்பு விருந்தினர்களான ஹரியானா, சுகாதார துறையின் இயக்குனர் டாக்டர். வீனா சிங் மற்றும் தனேசார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுபாஸ் சுதா கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

முன்கள பணியாளர்களுக்கு நன்கொடையாக இருசக்கர வாகனங்கள் வழங்கியது குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கார்ப்பிரேட்டின் சமூக பொறுப்பு பிரிவின் முதன்மை அதிகாரி பரதேந்து கபி பேசுகையில், ஒரு பொறுப்பான கார்ப்பரேட் குடிமகனாக, ஹீரோ மோட்டோகார்ப் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதில் உறுதியாக உள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

ஹரியானா மாநிலத்தின் பொது சுகாதார துறை இயக்குனரால் தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கத்தை ஆதரிப்பதற்காக ‘சக்கரங்களில் கொரோனா போராளிகள்' திட்டத்துடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். முன்கள பணியாளர்களுக்கு ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,09,412 ஆக உள்ளது. ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை ரூ.70,049 ஆக தற்சமயம் உள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

ஹீரோ மோட்டோகார்பின் மாடர்ன் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இல் பிஎஸ்6-க்கு இணக்கமான 163சிசி, ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 15 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 8.7 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.2 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வாகனத்திற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 70 மோட்டார்சைக்கிள்கள்!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு ரொம்ப நல்ல மனசுங்க!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 4,53,879 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகளவில் விற்பனை செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டவை என்று பார்த்தால், 4,31,137 யூனிட்களாகும். அதுவே கடந்த 5 மாதங்களில் 18 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

Most Read Articles

English summary
Hero MotoCorp donates 70 bikes, scooters to frontline workers in Haryana.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X