ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் இந்தியாவில் ரூ.72,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டாக களமிறக்கப்பட்டுள்ள ‘பிளாட்டினம்' எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.72,050 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான டெஸ்டினி 125 ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய பிளாட்டினம் எடிசன் புதிய டிசைன் மற்றும் தீம் பாகங்களை பெற்றுள்ளது.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

தோற்றத்தில் இதேபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் மற்றும் ப்ளஷர்+ பிளாட்டினம் போன்ற ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களை இந்த டெஸ்டினி பிளாட்டினம் எடிசன் பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

காஸ்ட்லீ தோற்றத்திற்காக க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட கண்ணாடிகளை இரு முனைகளிலும் கொண்ட ஹேண்டில்பாரை பெற்றுள்ள புதிய டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டரில் எக்ஸாஸ்ட் குழாயின் மேற்புறம் க்ரோமினால் ஃபினிஷ் செய்யப்பட்டும், முன்பக்க மட்கார்டில் க்ரோம் ஸ்ட்ரிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

இவை தான் ஸ்கூட்டருக்கு சற்று ரெட்ரோ தோற்றத்தை வழங்குகின்றன. புதிய மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் உட்புற பேனல்கள் பழுப்பு நிறத்திலும், இருக்கை கருப்பு & பழுப்பு என இரு விதமான நிறங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

அதேநேரம் சக்கரங்களில் வெள்ளை நிற டேப்பையும் பார்க்க முடிகிறது. பிளாட்டினம் வேரியண்ட் முத்திரை முப்பரிமாண வடிவில் ப்ரீமியம் தரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் வழக்கமான டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் போன்ற அம்சங்களை இந்த பிளாட்டினம் வேரியண்ட்டும் பெற்றுள்ளது.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

புதிய டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டரில் 124.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பிராண்டின் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி மற்றும் 5500 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

மேலும், டெஸ்டினி 125 பிளாட்டினம் ஹீரோ மோட்டோகார்பின் ஐ3எஸ் (ஐடியல்-ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம்)-ஐயும் பெற்று வந்துள்ளது. இந்த தொழிற்நுட்பம் எப்போது ஸ்கூட்டர் இயக்கத்தில் இல்லாமல் இருக்கிறதோ அப்போது என்ஜினை ஆஃப் செய்து ஸ்கூட்டரின் எரிபொருள் திறனை மேம்படுத்தும்.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன் மற்றும் பின்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஸ்விங்கார்ம்-இல் பொருத்தப்பட்ட ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் 130மிமீ-இல் ட்ரம் ப்ரேக்குகள் உள்ளன.

ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.72,000

இதன் 10 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ப்ள்ஷர்+ பிளாட்டினம் எடிசனிற்கு கிடைத்துவரும் வரவேற்பை பார்த்து மிகவும் தைரியமாகவும் நம்பிக்கை உடனும் டெஸ்டினி 125 பிளாட்டினம் எடிசனை அறிமுகப்படுத்தி உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Destini 125 Platinum Launched In India, Priced At Rs 72,000.
Story first published: Tuesday, March 23, 2021, 22:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X