மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

கடந்த மார்ச் மாதத்திற்கான ஹீரோ நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஹீரோ மோட்டோகார்ப் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 5,44,320 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,16,685 ஆக மட்டுமே இருந்தது. இது 71.9 சதவீத வளர்ச்சியாகும்.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

கடந்த மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு என்ற பெருமையை ஸ்பிளெண்டர் பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 1,43,736 ஆக இருந்த ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 2,80,090 ஆக உயர்ந்துள்ளது. இது 94.8 சதவீத வளர்ச்சியாகும்.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை ஹெச்எஃப் டீலக்ஸ் பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,14,969 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 1,44,505 ஆக உயர்ந்துள்ளது. இது 25.6 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை கிளாமர் பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் ஹீரோ நிறுவனம் 12,713 கிளாமர் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 32,371 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 155 சதவீத வளர்ச்சியை கிளாமர் பதிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் பேஷன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 30,464 பேஷன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 17,937 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 70 சதவீத வளர்ச்சியை பேஷன் பதிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ப்ளஷர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்தாண்டு மார்ச் மாதம் 13,898 ப்ளஷர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 28,516 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 105 சதவீத வளர்ச்சியை ப்ளஷர் பதிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை டெஸ்ட்டினி 125 பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 14,044 டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 9,523 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 47 சதவீத வளர்ச்சியை ஹீரோ டெஸ்ட்டினி 125 பதிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை ஹீரோ மேஸ்ட்ரோ பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 3,538 ஆக இருந்த மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 8,005 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 126 சதவீத வளர்ச்சியை ஹீரோ மேஸ்ட்ரோ பதிவு செய்து அசத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 194 ஆக இருந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 3,840 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 1879 சதவீத வளர்ச்சியை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பதிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் 9வது மற்றும் கடைசி இடத்தை எக்ஸ்பல்ஸ் 200 பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 20 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 2,485 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கடந்த மார்ச் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிக சிறப்பானதொரு மாதமாக அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Hero MotoCorp March 2021 Model Wise Sales - Splendor Leads Chart. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X