இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 1,83,044 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது வழக்கமான எண்ணிக்கையை காட்டிலும் மிக குறைவு.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

இருப்பினும் 2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த விற்பனை எண்ணிக்கை சற்று அதிகமே. ஏனெனில் கடந்த மே மாதத்தை போல் 2020 மே மாதத்திலும் நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்தன.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

இதனால் 2020 மே மாதத்தில் கடந்த மே மாதத்தை காட்டிலும் 62.44 சதவீதம் குறைவாக 1,12,682 இருசக்கர வாகனங்களையே ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் உண்மையில் ஹீரோ நிறுவனம் ஒவ்வொரு மாதத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய, அதற்கு ஏற்ற திறன் கொண்ட நிறுவனமாகும்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலைகள் அனைத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொரோனா பரவல் எதிரொலியாக தற்காலிக நிறுத்தியது. இதுவே கடந்த மாத விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3,39,329 யூனிட் இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ள 1,83,044 ஹீரோ தயாரிப்பு வாகனங்களில் 1,59,561 யூனிட்கள் இந்தியாவிலும், 23,483 யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டவை ஆகும்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

அதேபோல் மொத்த விற்பனை எண்ணிக்கையில் 1,78,706 மோட்டார்சைக்கிள்களும், 4,338 ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன. இதில் குறிப்பாக ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மிக பெரிய அளவில் (86.84%) குறைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

ஏனெனில் அந்த மாதத்தில் 32,956 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இவ்வளவு ஏன், ஊரடங்கு உத்தரவுகள் தீவிரமாக இருந்த 2020 மே மாதத்தில் கூட 6,644 ஹீரோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! பாதியாக குறைந்த ஹீரோவின் விற்பனை

இதனால் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை குறைவிற்கு ஊரடங்கை தாண்டி வேறெதாவது காரணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ பிராண்டில் இருந்து ஸ்கூட்டர் மாடல்களாக தற்சமயம் பிளஷர், மேஸ்ட்ரோ, டெஸ்டினி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
Hero MotoCorp, the world’s largest manufacturer of motorcycles and scooters sold 183,044 units of two-wheelers in the month of May 2021. Sales in the month of May’21 were adversely impacted due to the closure of plant operations in view of the escalation in the spread of the Coronavirus in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X