விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

2021ஆம் ஆண்டிற்கான விலை அதிகரிப்பிற்கு பிறகு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தயாரிப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட விலைகள் அட்டவணை மூலமாக தெரியவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

தயாரிப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் உலோக பாகங்களின் விலைகள் உயர்த்தப்படுவதை காரணம் காட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளின் விலைகளை ஆண்டுத்தோறும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

இந்த வகையில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதன் அனைத்து விற்பனை மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் குறைந்தப்பட்சமாக ரூ.450-ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.1,900 வரையில் உயர்த்தியுள்ளது. இதனை கீழேயுள்ள அட்டவணையில் விரிவாக பார்க்கலாம்.

Motorcycle New Price Old Price Difference
Xtreme 160R Drum ₹1,03,900 ₹1,02,000 ₹1,900
Xtreme 160R Disc ₹1,06,950 ₹1,05,050 ₹1,900
Xpluse 200 ₹1,15,230 ₹1,13,730 ₹1,500
Glamour Drum ₹71,900 ₹71,000 ₹900
Glamour Disc ₹75,400 ₹74,500 ₹900
Glamour Blaze Drum ₹73,100 ₹72,200 ₹900
Glamour Blaze Disc ₹76,600 NA -
Splendor iSmart Drum ₹66,500 ₹65,950 ₹550
Splendor iSmart Disc ₹68,700 ₹68,150 ₹550
Passion Pro Drum ₹67,400 ₹66,500 ₹900
Passion Pro Disc ₹69,600 ₹68,700 ₹900
Splendor Plus Kick Start ₹61,785 ₹60,960 ₹825
Splendor Plus Self Start ₹64,085 ₹63,260 ₹825
Splendor Plus i3S ₹65,295 ₹64,470 ₹825
Splendor Plus Black Accent ₹65,295 ₹64,470 ₹825
HF Deluxe Spoke Wheel ₹50,200 ₹48,950 ₹1,250
HF Deluxe Kick Start ₹51,200 ₹49,950 ₹1,250
HF Deluxe Self Start ₹59,900 ₹58,600 ₹1,300
HF Deluxe Self Start i3S ₹61,225 ₹59,600 ₹1,425
HF Deluxe Self Start i3S Black ₹60,225 NA -
Super Splendor Drum ₹69,900 ₹69,450 ₹450
Super Splendor Disc ₹73,400 ₹72,950 ₹450
விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

ஹீரோவின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளின் இரு வேரியண்ட்களின் விலைகளும் அதிகப்பட்ச விலை உயர்வு தொகையான ரூ.1,900-ஐ ஏற்றுள்ளன. எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இன் ஆரம்ப விலை ரூ.1,02,000ஆக இருந்தது. அது தற்போது ரூ.1,03,900 ஆக அதிகரித்துள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

விற்பனையில் சக்கைபோடு போட்டுவரும் எக்ஸ்பல்ஸ் 200-ன் விலை ரூ.1,500 அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பலஸ் 200-இன் விலை இனி ரூ.1,15,230 ஆகும். ஹீரோ கிளாமர் பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.71,000-ல் இருந்து ரூ.71,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

ஹீரோவின் அடையாளமான ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் பைக்குகளின் ஆரம்ப 65,950-இல் இருந்து 66,500 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.61,785ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அதன் முந்தைய விலையை காட்டிலும் ரூ.825 அதிகமாகும்.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

பேஷன் ப்ரோ ட்ரம் & டிஸ்க் வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.900 அதிகரிக்கப்பட்டுள்ளது. எச்எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஆரம்ப விலை முன்பு ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இது அதிரடியாக ரூ.1,250 அதிகரிக்கப்பட்டு ரூ.50,200ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

இந்த விலை அதிகரிப்பு எச்எஃப் டீலக்ஸ் ஸ்போக் சக்கரம் மற்றும் கிக் ஸ்டார்ட் வேரியண்ட்களுக்கு மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,300-ம், செல்ஃப் ஸ்டார்ட் ஐ3எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,425-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதியதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட எச்எஃப் டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட் ஐ3எஸ் ப்ளாக்கின் விலை ரூ.60,225ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு ஹீரோ பைக்குகளின் விலைகள் இனி இவைதான்!! முழு விபரம் இதோ..

சூப்பர் ஸ்பிளெண்டர் ட்ரம் பைக்கின் விலை ரூ.69,450-ல் இருந்து ரூ.69,900ஆகவும், டிஸ்க் வேரியண்ட்டின் விலை ரூ.72,950-ல் இருந்து ரூ.73,400 ஆகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் ரூ.450 அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளே, உங்களது பகுதியில் இவற்றின் ஆன்-ரோடு விலைகளை அறிய அருகில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களை அணுகவும்.

Most Read Articles

English summary
Hero Motorcycles Scooters Price List Jan 2021 – Splendor, Glamour
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X