ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது.. நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வருகின்ற 2022ம் ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகிவிடும் என தகவல்கள் கூறுகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

அதாவது, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதிக்குள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் மின்சார வாகனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேறிவிடும் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலை மணிகன்ட்ரோல் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

ஹீரோ நிறுவனத்தின் நெறுங்கிய தொடர்புகளின் வாயிலாக இத்தகவல் வெளிவந்திருப்பதாக கூறப்படுகின்றது. ஹீரோ நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இத்தகவல் ஆறுதலாக அமைந்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

ஹீரோ எலெக்ட்ரிக் எனும் பெயரில் ஏற்கனவே இந்திய சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நேரடி தொடர்பு கொண்டு நிறுவனம் அல்ல என்பது கவனித்தக்கத்து.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

இந்நிலையிலேயே தன்னுடைய பிராண்டின்கீழ் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனத்தை இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறக்கும் முயற்சியில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியின் அடிப்படையில் ட்யூவட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

ஆகையால், இதில் ஏதேனும் ஓர் மின்சார வாகனமே மிக விரைவில் இந்திய சந்தையைக் கலக்கும் வகையில் அறிமுகமாக இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் வெளியிடவில்லை.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

அதேசமயம், மிக சமீபத்தில் கோகோரோ எனும் தாய்வான் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் அண்மையில் கை கோர்த்தது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களை அமைப்பதற்காக இக்கூட்டணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது... நீங்க ஆவலோடு எதிர்பார்த்த தகவல் இதோ!!

இந்த நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. தற்போது இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்கு வருமானால் மேற்கூறிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு இது போட்டியாக அமையும்.

Most Read Articles

English summary
Hero MotoCorp Planning To Launch First Electric Scooter To Be Next Year. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X